கடவுள் ரஷ்யாவை பார்த்துக்கொண்டு இருக்கிறார்..ஓடி ஒளிய முடியாது - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களை கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார் எனவும் கடவுள் தண்டிக்கும் போது ரஷ்யாவால் எங்கும் ஒளிந்து கொள்ள முடியாது எனவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா தாக்குதலில் உக்ரைனில் உள்ள தேவாலயங்கள் சேதமடைந்துள்ளதை சுட்டிக்காட்டி அதிபர் செலன்ஸ்கி தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 8வது நாளாக தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்ய இராணுவ கைப்பற்றி வரும் நிலையில், துறைமுக நகரான கெர்னாஸ்கைக் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. தலைநகர் கீவ், கார்கிவ் நகர் ஆகியவை பெரும்பாலும் ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
மேலும் கெர்சான் நகரைத் தொடர்ந்து மற்றொரு துறைமுக நகரான மரியுபோலையும் ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளன. இருப்பினும் கீவ், கார்கிவ், மரியுபோலில் இருந்து உக்ரேனியர்கள் பாதுகாப்பாக வெளியேற 'மனிதாபிமான வழித்தடங்களை' ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜெலன்ஸ்கி வீடியோ
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று வெளியிட்ட வீடியோவில், "எங்கள் நாட்டின் மீது படையெடுத்ததற்கான விலையை ரஷ்யா நிச்சயம் கொடுக்கும். இழப்பீடு என்றொரு வார்த்தைக் உள்ளது. அதை இப்போதே உச்சரித்துப் பழகுங்கள். எங்களுக்கு நீங்கள் செய்த கொடுமைகள் அனைத்திற்கும் நீங்களே இழப்பீடு தருவீர்கள் என்று கூறியுள்ளார்.

எங்களின் சுதந்திரம்
ஒவ்வொரு உக்ரேனியருக்கும் நீங்கள் உதவி செய்ய வேண்டியது வரும் என்று கூறியுள்ளார். இப்போதைக்கு நாங்கள் இழப்பதற்கு எங்களின் சுதந்திரத்தைத் தவிர வேறு ஏதுமில்லை. ஆனால், நாங்கள் இங்குள்ள ஒவ்வொரு நகரையும், ஒவ்வொரு தெருவையும் ஏன் ஒவ்வொரு வீட்டையும் கூட மீட்டமைப்போம் என்று தெரிவித்துள்ளார்.

கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்
உக்ரைனுக்கு ஐரோப்பிய நட்பு நாடுகளிடமிருந்து அன்றாட போருக்குத் தேவையான தளவாடங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன" என்று கூறியுள்ளார். மேலும் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களை கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார் எனவும் கடவுள் தண்டிக்கும் போது ரஷ்யாவால் எங்கும் ஒளிந்து கொள்ள முடியாது எனவும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

பலத்த சேதம்
ராஷ்யாவின் தாக்குதல் காரணமாக உக்ரைன் நாட்டில் பல முக்கிய நகரங்கள் சேதமடைந்து சின்னாபின்னமாகியுள்ளது. ரஷ்யா தாக்குதலில் உக்ரைனில் உள்ள தேவாலயங்கள் சேதமடைந்துள்ளதை சுட்டிக்காட்டி அதிபர் செலன்ஸ்கி தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார். இதனிடையே உக்ரைனில் ரஷ்யர்கள், ரஷ்ய அரசின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

2ஆம் கட்ட அமைதிப்பேச்சுவார்த்தை
ரஷ்யாவின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான புதிய சட்டத்திற்கு உக்ரைன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட அமைதிப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications