"கூகுள் வேலை வேண்டாம்".. ரூ.3.4 கோடி சம்பளத்தை உதறி வெளியேறிய பெண் மேனேஜர்! அந்த காரணம் தான் ஹைலைட்
சூரிச்: ஐடி நிறுவனத்தில் தொடர்ந்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் கூகுள் நிறுவனத்தில் ரூ.3.40 கோடி சம்பளத்தில் பணியாற்றி வந்த சீனியர் புரோகிராம் மேனேஜர் தனது பணியை திடீரென்று ராஜினாமா செய்து வெளியேறி உள்ளார். அதற்காக அவர் கூறிய காரணம் அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது.
கூகுள் நிறுவனத்தில் சீனியர் புரோகிராம் மேனேஜராக பணியாற்றி வந்தவர் ஃப்ளோரன்ஸ் போய்ரல். இவருக்கு வயது 37. இவர் முதலில் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணியை தொடங்கினர்.

அதன்பிறகு சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கு ஆண்டுக்கு 3 லட்சத்து 90 ஆயிரம் அமெரிக்க டாலர் சம்பளமாக வழங்கப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.3.40 கோடியாகும். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் தான் ஃப்ளோரன்ஸ் போய்ரல் திடீரென்று தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது பல ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இப்படியான சூழலில் அவரது ராஜினாமா அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இதுபற்றி ஃப்ளோரன்ஸ் போய்ரல் தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியுள்ளாதாவது:
பணி ராஜினாமா
‛‛நான் கூகுள் நிறுவனத்தின் சூரிச் அலுவலகத்தில் சீனியர் புரோகிராம் மேனேஜராக பணி புரிந்து வந்தேன். ஆண்டுக்கு ரூ.3.4 கோடி சம்பளமாக வந்தது. ஆனால் நான் பணியை ராஜினாமா செய்துவிட்டேன். இந்த வருமானத்தை கைவிடுவது கடினமானதாக இருக்கலாம். ஆனால் எனக்கு பணியை விட வேண்டும் என்று தோன்றியது.
என்ன காரணம்?
இதற்கு முக்கிய காரணம் உள்ளது. நான் பணியாற்றியபோது அந்த வேலை எனக்கு சோர்வை தரவில்லை. மகிழ்ச்சியாகவே பணி செய்து வந்தேன்.
ஆனால் என்னை நேசிக்கும் நபர்களுடன் என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை. அவர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். ஏனென்றால், வாழ்க்கை மிகவும் குறுகியது. அதேவேளையில் அழகானது.
வேலை வேலை என வேண்டாம்
இதனால் உண்மையிலேயே மகிழ்ச்சியை தரும் நபர்களுடன் நேரம் செலவிட்டு அவர்களுடனான அனுபவத்தை பெற நினைத்தேன். அதேபோல் வாழ்க்கையின் பெரும் பகுதியை வேலை வேலை என்று அலுவலகத்திலேயே செலவிட விரும்பவில்லை.
இதனால் பணியை ராஜினாமா செய்தேன். இப்போது பணியை விட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார். கூகுள் பணியை விட்டு வெளியேற அவர் கூறியுள்ள காரணம் அனைவரின் புருவத்தையும் உயர்த்தி உள்ளது.
‛பாய் ப்ரண்ட்டுடன் ஜாலி’
முன்னதாக அவர் 2024ம் ஆண்டிலேயே ரூ.12.5 கோடி வரை சேமித்து வைத்து கொண்டார். தனது எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு அவர் இந்த பணத்தை முறையான திட்டமிடலுடன் சேமித்தார். இப்போது அவர் தன்னுடன் கூகுளில் வேலை செய்த வந்த 17 வயது மூத்த ஜான் என்ற ‛பாய் ப்ரண்ட்’ உடன் நேரம் செலவிட்டு வருகிறார்.
ஜானும் கூகுள் பணியை உதறி தள்ளியவர் தான். பணி ஓய்வுக்கு பிறகு இருவரும் நேரம் செலவிடலாம். ஆனால் அது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்காது என்று இருவரும் நினைத்து ஒன்றாக பணியை கைவிட்டு மகிழ்ச்சியாக வலம் வருகின்றனர்.
மேலும் தற்போது ஃப்ளோரன்ஸ் போய்ரல் சூரிச் நகரில் பெண்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சியை வழங்கி வருவதோடு, நீச்சலடித்து மகிழ்வது உள்பட பல பொழுதுபோக்குகளில் நண்பர்களுடன் நேரம் செலவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications