ஈரானில் கொரோனா கோரத் தாண்டவம்.. தவிக்கும் இந்தியர்கள்.. விரைகிறது மருத்துவ டீம்! மத்திய அரசு தீவிரம்
தெஹ்ரான்: கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது ஈரான். அங்குள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக மருத்துவ குழுவை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
Recommended Video
ஈரானில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. 92 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கேயுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் (என்.ஐ.வி) சேர்ந்த, ஒரு விஞ்ஞானி ஈரானுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) 3 பேர் கொண்ட குழு நேற்று மாலை ஈரான் அனுப்பப்பட்டனர்.
இந்தியாவை சேர்ந்த மருத்துவக் குழு இன்று ஈரானை சென்றடைய உள்ளது.
தேவைக்கேற்ப தெஹ்ரான் மற்றும் கோமில் சிக்கித் தவிக்கும் இந்திய யாத்ரீகர்கள் மற்றும் மாணவர்களை வெளியேற்றுவதற்காக மத்திய அரசு, ஈரானுடன் இணைந்து பணியாற்றும்.
தற்போது ஈரானில் 1,200 இந்தியர்கள், பெரும்பாலும் மாணவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் உள்ளனர். முன்னதாக, சீனாவிலிருந்து 767 இந்தியர்களை அரசு திரும்ப அழைத்து வந்தது. இரண்டு முறை விமானம் மூலம், இந்தியர்களை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டது.
சீனாவிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு வார்டுகளில் வைக்கப்பட்டுள்ளனர். ஈரானிலிருந்து வருவோரையும் இப்படி தனிமைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Update for Indians stranded in #Iran and for their families: Our medical team for screening arrives in Iran today. Hope to establish first clinic at Qom by this evening. Screening process will start immediately thereafter. Working on logistics of return with Iranian authorities.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) March 5, 2020
இதுபற்றி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் கூறியது: ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்குமான ஒரு அறிவிப்பு: ஸ்கிரீனிங்கிற்கான எங்கள் மருத்துவக் குழு இன்று ஈரானுக்கு வந்து சேர்கிறது. இன்று மாலைக்குள் கோமில் முதல் கிளினிக் நிறுவப்படும் என்று நம்புகிறேன். ஸ்கிரீனிங் செயல்முறை உடனடியாக தொடங்கும்.
-
அசிங்கப்பட்ட அமெரிக்கா.. 48 மணி நேர போர் நிறுத்தம் கோரிக்கையை நிராகரித்த ஈரான்.. ஹை டென்ஷன் -
அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த 'குட் ப்ரைடே' ஷாக்: மஜீத் டெக்னாலஜியால், வானில் சுருண்ட வார்ஹாக் -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்.. விமானிகளின் நிலை என்ன? ஷாக் தகவல்! -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
சோப்பு, சீப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயரபோகுது.. வார்னிங் கொடுக்கும் ரிப்போர்ட்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம்












Click it and Unblock the Notifications