கத்தார் தாக்குதல்.. உயிர் தப்பிய ஹமாஸ் தலைவர்கள்! இஸ்ரேல் தோல்வி

Subscribe to Oneindia Tamil

தோஹா: அமெரிக்க முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து, கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த தாக்குதலில் ஹமாஸ் தலைவர்கள் உயிர் பிழைத்தார்கள் என்று அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸுக்கும் இடையே நடைபெற்று வந்த போர் உச்சத்தை எட்டியிருக்கிறது. போரில் இதுவரை 64,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

Israel Qatar Gaza

எனவே போர் நிறுத்தம் தொடர்பாக சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்திருக்கிறது. அழுத்தம் காரணமாக அமெரிக்காவே போர் நிறுத்தம் தொடர்பாக முன்மொழிவுகளை கொடுத்தது. இந்த முன்மொழிவு தொடர்பாக பேச்சுவார்த்தையை ஹமாஸ் தலைவர்கள் மேற்கொண்டனர். பேச்சவார்த்தை நடந்துக்கொண்டிருந்தபோது சுமார் 16 இஸ்ரேல் போர் விமானங்கள், பேச்சுவார்த்தை நடந்த இடத்தை தாக்கியிருக்கின்றன. இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

ஆனால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த தங்கள் தலைவர்கள் உயிர்பிழைத்திருப்பதாக ஹமாஸ் கூறியிருக்கிறது. மேலும், "இந்த தாக்குதல் ஆக்கிரமிப்பின் குற்றவியல் தன்மையையும், உடன்படிக்கைக்கான எந்தவொரு வாய்ப்பையும் சீர்குலைக்கும் அதன் நோக்கத்தையும் மீண்டும் வெளிப்படுத்துகிறது. இந்த தாக்குதல் மோசமான குற்றம், அப்பட்டமான ஆக்கிரமிப்பு மற்றும் அனைத்து சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களை மீறிய செயல்" எனவும் விமர்சித்திருக்கிறது.

தாக்குதலில் ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹயாவின் மகன் மற்றும் அவரது உதவியாளர்களில் ஒருவர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்க நிர்வாகமே பொறுப்பு என ஹமாஸின் அரசியல் பிரிவு உறுப்பினர் சுஹைல் அல் விமர்சித்திருக்கிறார்.

இந்த தாக்குதலை கோழைத்தனம் என கத்தார் கடுமையாக விமர்சித்திருக்கிறது. கத்தார் தவிர சவுதி அரேபியா, ஈராக், ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் என அனைத்து அரபு நாடுகளும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

இந்த தாக்குதல் குறித்து ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டிருந்தது என அமெரிக்கா தரப்பில் சொல்லப்பட்டாலும், கத்தார் இதனை மறுத்திருக்கிறது. எந்த முன்னெச்சரிக்கையும் வழங்கவில்லை என தெரிவித்திருந்தது. அமெரிக்காவின் விமானத்தளம் கத்தாரில் இருந்த போதும், மூன்றாம் நாடு ஒன்று கத்தார் மீது தாக்குதலை ஏற்படுத்தியிருப்பது, கத்தாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+