ஏமனில் சவுதி தலைமையிலான விமானப்படை அதிரடித் தாக்குதல்... 40 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சனா : ஏமனில் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க சவுதி தலைமையிலான விமானப் படை நடத்திய தாக்குதலில் 40 பேர் பலியாகினர்.
ஏமனில் நடைபெற்றுவரும் ஹவுதிகள் தலைமையிலான உள்நாட்டு புரட்சியை முறியடிக்க, கடந்த மார்ச் மாதம் முதல் அங்கே சவுதி அரேபியா தலைமையிலான கூட்டு விமானப்படைகள் களமிறங்கி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஏமனின் மத்திய மாகாணமான பாய்டாவை குறிவைத்து கடந்த 24 மணிநேரத்தில் நடத்தப்பட்ட விமான தாக்குதல்களில் சுமார் 40 பேர் பலியாகி உள்ளனர்.
இறந்தவர்களில் 19 கிளர்ச்சியாளர்கள், 15 அரசு ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களில் 6 பேர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபத்திய சண்டையானது, ஏமன் தலைநகரை கட்டுப்படுத்தும் முக்கிய நகரங்களாக கருதப்படும் தாய்ஸ் உள்ளிட்ட முக்கிய மாகாணங்களை கைப்பற்றும் விதமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications