நமக்கு விண்வெளி ஆய்வுகள் ஏன் முக்கியம்? மனித சமூகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி இதுதானா!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்தியா சார்பில், விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் (சுபான்சு சுக்லா) அனுப்பப்பட்டிருக்கிறார். அதனை மொத்த நாடும் கொண்டாடி தீர்த்து வருகிறது. இந்நிலையில், விண்வெளி ஆய்வுகள் ஏன் முக்கியம் என்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மனிதர்கள் யார்? எதற்காக நாம் பூமியில் இருக்கிறோம்? நமக்கான பணி எது? என்பது காலங்காலமாக இருந்து வரும் கேள்விகள். இதனை ஒட்டி தத்துவங்கள் பிறந்திருக்கின்றன. மறுபுறம் இந்த கேள்விகளுக்கு விடைகளை தேடியது விண்வெளி தொடர்பான ஆய்வுகள்தான்.

space nasa isro

நாம் பிறந்ததற்கு பெருசா எந்த நோக்கமும் கிடையாது. சுற்றி பாருங்கள் மரம், செடி, கொடிகள், ஆடு, மாடு, காற்று, மழை இதெல்லாம் என்ன மனிதர்களை வாழ வைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் இருக்கிறதா? ஒன்னும் கிடையாது. அதெல்லாம் அது பாட்டுக்கு இருக்கிறது. நாம் அதை பயன்படுத்தி வாழ கற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால் மனிதர்களுக்கு முக்கியமான கடமை இருக்கிறது. நம்முடைய சமூகத்தை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதுதான் அது.

சரி அதுக்கும், விண்வெளி ஆய்வுகளுக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழலாம். பதில் இருக்கிறது. கடந்த காலத்தை தெரிந்துக்கொண்டால்தான் எதிர்காலத்தை உருவாக்க முடியும். கடந்த காலத்தை தெரிந்துக்கொள்ளும் வழிமுறைகளில் ஒன்றுதான் விண்வெளி ஆய்வுகள்.

பூமி எப்படி உருவானது? அது உருவான உடனேயே மனிதர்களும் தோன்றிவிட்டார்களா! வேறு எந்த மாதிரியான உயிர்கள் வாழ்ந்தன? பூமியில் உருவான முதல் உயிர் எப்படி இருக்கும்? இப்படி லட்சக்கணக்கான கேள்விகளுக்கு விண்வெளி ஆய்வுகள் பதிலை கொடுத்திருக்கிறது. இந்த பதில்கள் எந்த அளவுக்கு சுவாரசியமானவையாக இருக்கும் என்பதற்கு சிறிய உதாரணத்தை சொல்கிறேன்.

பூமி தோற்றம், மனிதன் உருவானது இதை இரண்டையும் புரிந்துக்கொள்ள இந்த உதாரணம் பயன்படும். 'பூமி உருவாக்கத்தை 24 மணி நேரமாக கற்பனை செய்துக்கொள்வோம். இதில் மனிதன் நள்ளிரவுக்கு சில விநாடிகளுக்கு முன்னர்தான் தோன்றியிருக்கிறான்' என்பதை ஆய்வாளர் கண்டுபிடித்தபோது, மொத்த மனிதகுல சிந்தனையும், தனது கோணத்தை மாற்றிக்கொண்டது.

இதெல்லாம் எதுக்குங்க தெரிஞ்சுக்கனும்? என்று கேட்கிறீர்கள் எனில் உங்களுக்கு இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன். 2700க்குள் பூமியை 'பென்னு' எனும் விண்கல் மோத இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு 1% தான் வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நிச்சயம் ஏதோ ஒரு ஆண்டில், ஏதோ ஒரு விண்கல் பூமியை மோதும். இதனால் பூமி பேரழிவை சந்திக்கலாம். அப்போது நமக்கு இருக்கும் வாய்ப்புகள் இரண்டுதான்.

ஒன்று, விண்கல்லை தாக்கி அழிப்பது. இரண்டாவது, பூமியிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்வது. ஆனால் இதில் முதல் ஆப்ஷன் நமக்கு சாத்தியம் குறைவானது. அயன் டோமை வைத்திருக்கும் இஸ்ரேல், ஈரான் ஏவும் சில மீட்டர் நீளம் கொண்ட ஏவுகணையை தாக்கி அழிக்க திணறுகிறது. அதுவே ஒரு பெரிய கட்டிடம் சைஸில் உள்ள விண்கல் எனில் அதை எந்த அயன் டோம் வைத்து எப்படி தடுக்க முடியும்?

ஆனால் இரண்டாவது ஆப்ஷன் நடைமுறை சாத்தியமானது. அதன்படி, நம்மால் புதிய கிரகத்தை கண்டுபிடித்து அதில் குடியேற முடியும். இதற்காகத்தான் நாம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில் மனித குலத்த காப்பாற்ற நமக்க விண்வெளி அய்வுகள் மிக முக்கியம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+