22 வயது இளைஞரை கைது செய்ய ராணுவ படையை அனுப்பிய சீனா.. ஹாங்காங்கில் பரபரப்பு.. யார் இந்த வாங்!
ஹாங்காங் போராட்டத்தை முன்னின்று நடத்திய 22 வயது இளைஞர் ஜோஸ்வா வாங் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
Recommended Video
ஹாங்காங்: ஹாங்காங் போராட்டத்தை முன்னின்று நடத்திய 22 வயது இளைஞர் ஜோஸ்வா வாங் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
சீனா மற்றும் ஹாங்காங் மக்களுக்கு இடையிலான போராட்டம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. ஹாங்காங்கை எப்படியாவது தன்னுடைய முழு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து விடலாம் என்று சீனா நினைக்கிறது.
ஆனால் இதற்கு எதிராக ஒவ்வொரு முறையும் ஹாங்காங் மக்கள் களமிறங்கி போராடி வருகிறார்கள். 2014ல் இருந்து ஹாங்காங் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஹாங்காங் என்ன பிரச்சனை
ஹாங்காங் சீனாவுடன் இருந்தாலும் அதற்கு சில சிறப்பு அதிகாரங்கள் இருக்கிறது. அதாவது ஹாங்காங் சீனாவின் முழு கட்டுப்பாட்டில் இல்லை. நாங்கள் சீனாவுடன் இருப்போம். ஆனால் எங்களுக்கு சட்டம் வேறு மாதிரி இருக்கும். எங்களுக்கு தனி அதிகாரம் கொண்டு ஆட்சியாளர்கள் இருப்பார்கள் என்று ஒப்பந்தம் செய்துதான் ஹாங்காங் சீனாவுடன் இணைந்தது.

ஆனால் என்ன
சீனாவுடன் இணையும் போது ஹாங் காங் தன்னாட்சி அதிகாரத்துடன் இருக்கும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இதை நீக்கும் பொருட்டு சீனா தொடர்ந்து சட்டம் இயற்றி வருகிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக ஹாங்காங் மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் ஹாங்காங் மக்களை நாடு கடத்த உரிமை அளிக்கும் வகையில் சட்டம் இயற்றவும் சீனா முயன்று வருகிறது.

ஏன் இப்படி
இதன் மூலம் ஹாங்காங்கில் இருக்கும் யாரை வேண்டுமானாலும் எளிதாக நாடு கடத்த முடியும். சீனாவிற்கு எதிராக பேசும் யாரையும் ஹாங்காங்கில், ஹாங்காங் ஆட்சியாளர் அனுமதி இன்றி நாடு கடத்த முடியும். அவர்களை சீனா உள்ளிட்ட எங்கும் நாடு கடத்த முடியும். இதை எதிர்த்துதான் அங்கு மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.

உச்சம்
தற்போதுதான் இந்த போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மிக முக்கியமாக ஹாங்காங்கில் சென்ட்ரல் விமான நிலையத்தில் பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. வார இறுதிநாட்களில் இந்த போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

லட்சம் பேர்
சுமார் 6-7 லட்சம் பேர் தினமும் சாலையில் இறங்கி போராடி வருகிறார்கள். இவர்களை எல்லாம் ஒருங்கிணைக்கும் ஒரு முகம் என்றால் அது ஜோஸ்வா வாங் என்ற இளைஞர்தான். இவருக்கு 22 வயதுதான் ஆகிறது. ஹாங்காங்கை சேர்ந்த இவர் அதன் சுயாட்சிக்காக 2014ல் இருந்து போராடி வருகிறார்.

2014 என்ன
2014ல் நடந்த குடை புரட்சி போராட்டத்தை இவர்தான் முன்னின்றி நடத்தினார். அப்போதே இவர் உலகம் முழுக்க அறியப்பட்டார். அந்த போராட்டம் ஹாங்காங்கை மொத்தமாக மாற்றியது. சீனா அப்போதில் இருந்து இவர் மீது ஒரு கண் வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன கைது
இந்த நிலையில் 22 வயது இளைஞர் ஜோஸ்வா வாங் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். சீனா ராணுவம் பெரிய அளவில் குவிக்கப்பட்டு, ஹாங்காங் போலீஸ் படையின் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இவர் எங்கே விசாரிக்கப்பட்டு வருகிறார் என்று இன்னும் விவரம் வெளியாகவில்லை. இவருடன் இன்னும் சில போராளி குழு தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாளை என்ன
நாளை ஹாங்காங்கில் பெரிய அளவில் போராட்டங்கள் திட்டமிடப்பட்டு இருந்தது. இதை தடுக்கும் பொருட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஹாங்காங் அமைதிக்கான மாநாட்டில் இந்த வாரம் வாங் கலந்து கொள்ள இருந்தார். அதற்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications