பேண்டமிக்கே மாறலாம்! வெள்ளை எலிகளிடம் கொத்து கொத்தாக பரவிய கொரோனா.. காத்திருக்கும் சிக்கல்!
ஹாங்காங்: ஹாங்காங்கில் ஒரே நேரத்தில் பல்லாயிரம் வெள்ளை எலிகளை கொலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் அரசின் இந்த உத்தரவிற்கு பின் மிக முக்கியமான காரணம் இருக்கிறது..
ஹாங்காங்கில் இப்படி வெள்ளை எலிகளுக்கு திடீரென rest in peace போடப்படுவது ஏன் என்று பார்க்கும் முன் ஒரு குட்டி ஸ்டோரி.. கொஞ்சம் மனசை திடப்படுத்திக்கொண்டு மேற்கொண்டு படியுங்கள். பொதுவாக கொரோனா வைரஸ் என்பது மனிதர்களிடம் பரவுகிறது என்று எல்லோருக்கும் தெரியும்.
இது பன்றியிடம் இருந்து வந்து இருக்கலாம், வெளவ்வாலிடம் இருந்து வந்து இருக்கலாம், ஆய்வகத்தில் இருந்து கசிந்து இருக்கலாம், செயற்கையாக உருவாக்கப்பட்டு இருக்கலாம், வெளவ்வால் சூப் சாப்பிட்டு வெளியேறி இருக்கலாம் என்றெல்லாம் நிறைய உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

விலங்குகளிடம் பரவும் கொரோனா
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கொரோனா மனிதர்களிடம் மட்டுமின்றி விலங்குகள், பறவைகள், வீட்டில் இருக்கும் பெட்களிடமும் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு விலங்கிற்கு கொரோனா பரவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏற்கனவே சென்னை வண்டலூரில் சில சிங்கம் கொரோனா காரணமாக பலியானது. உலகம் முழுக்க பல விலங்குகள் இப்படி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்
விலங்குகளிடம் கொரோனா பரவுவது ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை அவ்வளவு பெரிய ஆபத்தான விஷயம் கிடையாது. ஒன்று இரண்டு சிங்கம், புலிக்கு கொரோனா பரவினால் அதில் சிக்கல் இல்லை. ஆனால் ஒருவேளை நிறைய காட்டு விலங்கிற்கு கொரோனா பரவினால் அது இந்த பெருந்தொற்றை அடியோடு மாற்றும். அதாவது பல சிங்கங்களுக்கு காட்டில் கொரோனா ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். சிங்கங்கள் இடையே அதிகமாக கொரோனா பரவி, அது இன்னும் மோசமாக உருமாற்றம் அடைந்து வேறு விலங்கிற்கு சென்று மீண்டும் மனிதர்களுக்கு திரும்பும் வாய்ப்புகள் உள்ளன.

புதிய அலைகள் ஏற்படும்
இதில் என்ன சிக்கல் என்றால் பொதுவாக விலங்குகள்தான் வைரஸ்களின் வங்கிகள் போல செயல்படும். வௌவால்கள் எப்படி பல லட்சம் வைரஸ்களை பரப்புகிறதோ அது போல. ஒரு மனிதர்களிடம் ஒரு வைரஸ் பரவி முற்றிலுமாக கட்டுப்படுத்த பின் மீண்டும் விலங்கிடம் இருந்து அதே வைரஸ் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. அதாவது மீண்டும் புதிய அலைகளை விலங்குகள் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இப்போது நாம் கொரோனாவை வேக்சின் வைத்து கட்டுப்படுத்திவிட்டால் கூட மீண்டும் வேறு ஒரு விலங்கு மூலம் மறுபடியும் கொரோனா மனிதர்கள் இடையே பரவும் வாய்ப்புகள் உள்ளது.

மீண்டும் மீண்டும் வைரஸ்
அதாவது மறுபடியும் முதல்ல இருந்தா என்று வடிவேல் சொல்வது போல... வந்துச்சு.. போனுச்சு.. ரிப்பீட்டு என்று கொரோனா மீண்டும் மனிதர்கள் இடையே பரவும் அபாயம் ஏற்படும். சரி இதற்கும் ஹாங்காங்கில் வெள்ளை எலிகளை என்கவுண்டர் செய்ய உத்தரவிட்டதற்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறார்களா? ஹாங்காங்கில் வெள்ளை எலிகள் இடையே பரவும் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு வெள்ளை எலிகளை போட்டுத்தாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வெள்ளை எலி கொரோனா
அதன்படி அங்கு இருக்கும் வெள்ளை எலி வளர்ப்பு மையத்தில்தான் முதலில் ஒரு வெள்ளை எலிக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு உள்ள வெள்ளை எலிகளை சோதனை செய்ததில் 11 வெள்ளை எலிகளுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்திற்கும் டெல்டா வகை கொரோனா இருந்துள்ளது. அந்த கூடத்தில் 2000 வெள்ளை எலிகள் இருந்துள்ளன. இங்கு இருந்த வெள்ளை எலிகள் ஏற்கனவே வளர்ப்பு விலங்காக மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் எலிகளிடம் இருந்து மீண்டும் புதிய கொரோனா அலை தோன்ற வாய்ப்பு உள்ளதால் வெள்ளை எலிகளை கொலை செய்ய ஹாங்காங்கை கட்டுப்படுத்தும் சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

கண்ட்ரோல் ரூம்
இதற்காக தற்போது அங்கே கண்ட்ரோல் ரூம் ஒன்று உருவாக்கப்பட்டு வெள்ளை எலிகளின் கிடங்குகள், அதை வளர்ப்பவர்களுக்கு போன் செய்து வெள்ளை எலிகளின் உடல்நிலை குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 34 வெள்ளை எலி பெட் ஷாப்களில் இருக்கும் 2000 வெள்ளை எலிகளை கொலை செய்ய தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுவாக விலங்குகளிடம் பரவும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடையும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் அதிக வீரியத்தோடு எதிர்காலத்தில் மீண்டும் புதிய அலைகள் ஏற்படலாம்.

வெள்ளை எலி ஹாங்காங்
உதாரணமாக கொரோனா வைரஸ் மான்களிடம் பரவி வரும் நிலையில் மனிதர்கள் எல்லோரும் வேக்சின் போட்டு கொரோனாவில் இருந்து குணமடைந்தாலும் கூட எதிர்காலத்தில் மீண்டும் இந்த எலிகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா வரும் அபாயம் உள்ளது. முன்னதாக இதேபோல் அமெரிக்காவில் இருக்கும் மான் வகைகளிடம் கொரோனா வைரஸ் பரவியது. அமெரிக்காவில் தென்கிழக்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் 40 சதவிகித வெள்ளை வால் மான்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

புதிய பல வகை வைரஸ் தோன்றுமோ?
அதேபோல் அமெரிக்காவில் பென்சில்வேனியா பகுதிகளில் 30 சதவிகித மான்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐயோவா பகுதியில் மட்டும் கொரோனா காரணமாக 80 சதவிகித வெள்ளை மான்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் அமெரிக்காவில் மான்கள் இடையே கொரோனா பரவுவது உறுதியாகி உள்ளது. மான்கள், எலிகள் என்று பல விலங்குகளிடம் இப்போது கொரோனா பரவுவதால் வரும் நாட்களில் இந்த பெருந்தொற்று மொத்தமாக மாற்றம் அடைந்து புதிய பல வகை வைரஸ் தோன்றுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications