ஹவுதி தீவிரவாதிகள் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. 75 ஏமன் வீரர்கள் பலி.. மசூதி தரைமட்டம்
சனா, ஏமன்: ஏமன் நாட்டில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் 75 ஏமன் நாட்டு ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
மாரிப் என்ற மாகாணத்தில் உள்ள ராணுவ முகாமில்தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. மசூதி அருகே உள்ள வளாகத்தில் இந்த ராணுவ முகாம் உள்ளது. ஹவுதி புரட்சிக்காரர்களுக்கு எதிரான தாக்குதலை ஏமன் ராணுவத்தினர் அதிகரித்திருந்த நிலையில் ராணுவத்தினர் குறி வைத்து தாக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் சனாவிலிருந்து 170 கிலோமீட்டர் தூரத்தில் மாரிப் உள்ளது. ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி புரட்சிக்காரர்கள் ஈரான் ஆதரவுடன் ஏமன் ராணுவத்தினரை எதிர்த்து போராடி வருகின்றனர். அவர்கள் மீதான தாக்குதலை சமீப நாட்களாக அதிகரித்துள்ளது ஏமன் ராணுவம். இரு தரப்புக்கும் இடையே பல இடங்களில் அதிரடி மோதல்கள் வலுத்து வருகின்றன.
இந்த நிலையில் ஏமன் அரசைக் கவிழ்க்கும் நடவடிக்கைகளை ஹவுதி புரட்சியாளர்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு ஈரான் முழு ஆதரவைக் கொடுத்து வருகிறது. மறுபக்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் இருந்து வரும் ஏமன் அரசுக்கு சவூதி மற்றும் அதன் நட்பு நாடுகள் ஆதரவாக உள்ளன. இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் உக்கிரமடைந்துள்ளது.
இந்த நிலையில்தான் ராணுவ முகாமை குறி வைத்து ஹவுதி புரட்சியாளர்கள் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளனர். சரமாரியாக நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 75 படையினர் கொல்லப்பட்டதோடு 100க்கும் மேற்பட்டோர் காயடைந்தனர். அந்த முகாமே சீர்குலைந்து போய் விட்டது. மசூதியும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்புதான் வடக்கு சனாவில் உள்ள நஹம் என்ற பகுதியில் ஹவுதி புரட்சிக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையை ஏமன் அரசு முடுக்கி விட்டிருந்தது. இந்த நிலையில்தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஏமன் அதிபர் அபெத்ரபூ மன்சூர் ஹாடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது கோழைத்தனமானது, தீவிரவாத செயல். ஹவுதி தீவிரவாதிகள் அமைதியை விரும்பவில்லை என்பதையே இது நிரூபிக்கிறது. அவர்களுக்கு அழிவு, மரணம், கொலையைத் தவிர வேறு எதுவுமே தெரியாது. ஈரானின் தூண்டுதலால் ஏமனின் அமைதியைக் குலைக்கவே அவர்கள் விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications