ஜெய்சங்கர் சம்பவம்! இந்தியாவின் ராஜாங்க வெற்றி.. 8 கடற்படை வீரர்களை கத்தார் ரிலீஸ் செய்தது எப்படி?
டோஹா: இந்தியாவுக்கு பெரிய ராஜதந்திர வெற்றியாக 8 இந்திய கடற்படை வீரர்களை கத்தார் விடுதலை செய்துள்ளது. தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாகக் கூறப்படும் வழக்கில் கத்தாரில் சிறை செய்து வைக்கப்பட்டிருந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை கத்தார் விடுவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA), இன்று அதிகாலை வெளியிடப்பட்ட அறிக்கையில், கத்தாரில் இந்த முடிவை வரவேற்று உள்ளது. அல் தஹ்ரா குளோபல் கம்பெனி என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் உளவாளிகள் என்று கூறி கைது செய்யப்பட்டார்கள்.

கத்தாரில் இந்திய அரசுக்காக உளவு பார்த்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த 8 பேரில் ஏழு பேர் கத்தாரில் இருந்து தற்போது இந்தியா திரும்பியுள்ளனர்.
கத்தாரில் கைது செய்து வைக்கப்பட்டு இருந்த தஹ்ரா குளோபல் நிறுவனத்தில் பணிபுரியும் எட்டு இந்தியர்களின் விடுதலையை இந்திய அரசு வரவேற்கிறது. 8 பேரில் ஏழு பேர் இந்தியா திரும்பியுள்ளனர். கத்தார் அரசின் முடிவை நாங்கள் பாராட்டுகிறோம். என்று வெளியுறவுத்துறை தங்கள் அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜெய்சங்கர் சம்பவம்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரின் தொடர் முயற்சி காரணமாக இவர்கள் 8 பேரும் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். பொதுவாக ஒரு நாட்டின் பாதுகாப்பு துறை நிர்வாகிகள் ஓய்வு பெற்ற பின் வெளிநாட்டில் பணியாற்றினால்.. அவர்கள் வெளிநாட்டில் உளவு செய்கிறார்கள் என்ற சந்தேகம் வருவது இயல்பு.
உதாரணமாக அமெரிக்கா பாதுகாப்பு துறை நிர்வாகி ஒருவர் அங்கே ஓய்வு பெற்று இந்தியாவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்படிப்பட்ட நேரத்தில்.. அந்த அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு அதிகாரியை உளவு பார்க்கும் அதிகாரியாக சந்தேகம் கொள்வது இயல்பே.
அப்படிதான் கத்தாரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த இந்தியாவை சேர்ந்த 8 முன்னாள் கடற்படை நிர்வாகிகள் உளவாளிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு இவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக அமைச்சர் ஜெய் சங்கர் தொடர்ச்சியாக பல பேச்சுவார்த்தைகளை கத்தார் அரசுடன் தீவிரமாக நடத்தி வந்தார். இந்த பேச்சுவார்த்தை காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் உளவு பார்த்த வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டு இந்திய கடற்படை வீரர்களின் மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் ரத்து செய்தது. மரண தண்டனை சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து ஜெய் சங்கர் போன் மூலமும், நேரடியாகவும் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் தற்போது இவர்கள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர் . இவர்கள் உளவாளிகள் இல்லை என்று இந்திய அரசு வைத்த வாதத்தை கத்தார் ஒருவழியாக் ஏற்றுக்கொண்டுள்ளது.
கத்தாரில் கைது செய்யப்பட்ட 8 இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் -- கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கமாண்டர் சுகுணாகர் பகலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா மற்றும் மாலுமி ரகேஷ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications