Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்முன் வந்த வாஜ்பாய்.. திடீரென போரை நிறுத்த நம்மிடம் பாகிஸ்தான் கெஞ்சியது ஏன்? மண்டியிட்ட பின்னணி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இருந்த பதற்றம் தணிந்துள்ளது. இதற்கு நேற்று மாலையில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் தான் காரணம். நம் நாட்டின் அதிரடி தாக்குதலுக்கு பயந்து பாகிஸ்தான் மண்டியிட்டு எப்படியாவது போரை நிறுத்துங்கள் என்று கெஞ்சியதால் நம் நாடு ஓகே சொன்னது. இந்நிலையில் தான் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வருவதற்கு அவரது அண்ணன் நவாஸ் ஷெரீப் முக்கிய காரணம் என்றும், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் அவர் பதவியை பறிகொடுத்த சம்பவமும் தான் காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்தது. கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின், பஹல்காமில் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்ற சம்பவத்துக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்று அமைப்பு பொறுப்பேற்றது. இது பாகிஸ்தான் ஆதரவில் செயல்பட்டு வரும் அமைப்பாகும். இதையடுத்து தான் பதற்றம் என்பது அதிகரித்தது.

how-did-the-pakistani-pm-shehbaz-sharif-come-to-the-ceasefire-with-india-after-advice-from-his-elder

இதற்கு பதிலடியாக கடந்த புதன் கிழமை நள்ளிரவு 1 மணியளவில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை ஏவுகணை, ட்ரோன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி நம் நாடு அழித்தது. இதற்கு பதிலடி கொடுக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டது.
பாகிஸ்தான் ட்ரோன், ஏவுகணை, போர் விமானங்கள் மூலம் நம்மை தாக்க முயன்றது. இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

அதன்பிறகு நேற்று காலையில் நம் நாடு ஏவுகணை தாக்குதல் மூலம் பாகிஸ்தானின் 3 முக்கிய விமான தளங்கள் அழித்தது. இதற்கு பதிலடி கொடுக்க முயன்று பாகிஸ்தானின் மூக்கும் உடைந்தது. இறுதியாக நேற்று மாலையில் போர் நிறுத்தம் இறுதியானது. நம் நாட்டின் அதிரடி தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் நிலைக்குலைந்து பேனதால் அந்த நாடு இறங்கி வந்தது. அதோடு உலக நாடுகள் மூலம் போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் முயற்சித்தது. இதனால் மண்டியிட்ட பாகிஸ்தானின் கோரிக்கையை மனிதாபிமான அடிப்படையில் நம் நாடு ஏற்று போர் நிறுத்தத்தை அறிவித்தது. பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) நம் நாட்டின் டிஜிஎம்ஓவை தொடர்பு கொண்டு பேசியதை தொடர்ந்து இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இப்போது இருநாடுகளின் எல்லையில் அமைதி திரும்பி உள்ளது.

இந்நிலையில் தான் பாகிஸ்தான் 3 நாட்கள் கழித்து நேற்று போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக நம் நாட்டிடம் திடீரென்று பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னணியில் முக்கிய நபர் இருக்கிறார். அவர் யார் என்றால் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அண்ணனான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தான். அதாவது நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்ததால் நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பினார்.

அதன்பிறகு அவர் தனது தம்பியான ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவிடம் மோத வேண்டாம். மோதினால் பிரச்சனை என்பது பெரிதாகி விடும். இதனால் மோதலை கைவிட்டுவிட்டு இந்தியாவுடன் இணக்கமாக செல்வது தான் நல்லது. மேலும் தூதரகம் மற்றும் அதிகாரிகள் வழியாக பேசி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர பார்க்க வேண்டும். வீராப்பாக சண்டையிடுவது என்பது நமது பதவிக்கும், நமது நாட்டுக்கும் தான் ஆபத்து என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி 1999 கார்கில் போரின்போது நம் நாட்டின் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடன் மோதி பதவியை இழந்ததையும் நவாஸ் ஷெரீப் அவரிடம் எடுத்துரைத்துள்ளார். இதையடுத்து தான் ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் மோதலை கைவிட முடிவு செய்துள்ளார். அதன்பிறகு வெளிநாடுகள் மற்றும் தூதரகம் வழியாக பேச்சுவார்த்தைக்கு முயன்றார். இப்படி பாகிஸ்தான் கெஞ்சிய பிறகு தான் நம் நாடு போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் ஷெபாஸ் ஷெரீப்பிடம், கார்கில் போர் குறித்து நவாஸ் ஷெரீப் பேசியபோது இந்தியாவுடன் போர் புரிந்து தோற்றுவிட்டால் உனது பதவிக்கு ஆபத்து வரும். ஏனென்றால் 1999 கார்கில் போரில் தோற்று பதவியை நான் இழந்தேன் என்று கூறினார். இதனால் பதவியை காப்பாற்றி கொள்ள ஷெபாஸ் ஷெரீப் முடிவு செய்து இறங்கி வந்து நம் நாட்டிடம் சரணடைந்துள்ளார்.

முன்னதாக 1999ல் நடந்த கார்கில் போரில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நடந்தது. அப்போது பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் தான் நவாஸ் ஷெரீஃப். நம் நாட்டின் பிரதமராக வாஜ்பாய் இருந்தார். இந்தியா - பாகிஸ்தான் இடையே கார்கில் போரை பாகிஸ்தான் சார்பில் தலைமை தாங்கி நடத்தியவர் அந்த நாட்டின் ராணுவ தளபதி பர்வேஷ் முஷாரஃப். போரில் பர்வேஷ் முஷாரஃப் ராணுவத்தை வீழ்த்தி நம் நாட்டு ராணுவம் மாபெரும் வெற்றியை பெற்றது.

ஆனால் கார்கில் போர் தோல்வியை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு எதிராக பர்வேஸ் முஷ்ரஃப் திருப்பினார். அமெரிக்காவின் பேச்சை நவாஸ் ஷெரீஃப் கேட்டு போரை முடக்கிவிட்டார். இல்லாவிட்டால் பாகிஸ்தான் வென்று இருக்கும் என்று மக்களிடம் கூறினார். இது பாகிஸ்தான் மக்களிடம் எடுபட்டது. மேலும் நவாஸ் ஷெரீஃப்புக்கு எதிராக ராணுவத்தை ஒன்றிணைந்து ராணுவ புரட்சி செய்தார். அதில் வெற்றியும் பெற்றார். நவாஸ் ஷெரீஃப்பின் ஆட்சி கவிழ்ந்தது. பாகிஸ்தான் அதிபராக பர்வேஷ் முஷ்ரஃப் பொறுப்பேற்றார்.

ஏற்கனவே தற்போது பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் மற்றும் ஐஎஸ்ஐ உளவுத்துறை தலைவராக இருக்கும் அசீம் மாலிக் ஆகியோருக்கும், ஷெபாஸ் ஷெரீப்புக்கும் இடையே மனக்கசப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியா உடனான போரில் சிறு பிழை நடந்தாலும் கூட ராணுவ புரட்சி ஏற்பட்டு ஆட்சியை பறிகொடுக்கலாம் என்று ஷெபாஸ் ஷெரீப்பிடம் அண்ணன் நவாஸ் ஷெரீப் வார்னிங் செய்துள்ளார். அதன்பிறகு தான் இந்த போரை நிறுத்தும்படி ஷெபாஸ் ஷெரீப் சார்பில் நம் நாட்டிடம் கெஞ்சப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+