மோசமாகும் நிலைமை.. பிடன் செய்த பெரிய தவறு.. அணு ஆயுதத்தை களமிறக்கும் புடின்.. காரணம் அமெரிக்கா?

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: அமெரிக்க அதிபர் ஜோ பிடன் செய்த தவறு காரணமாக.. உலக அளவில் அணு ஆயுத போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அணுசக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த கூடாது என்ற விதியை வைத்து உள்ளது ரஷ்யா. ஆனால் இந்த விதியை ரஷ்யா தற்போது அதிபர் புடின் உத்தரவின் பெயரில் மாற்றி உள்ளது.

அதன்படி அணு சக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராகவும் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய அதிபர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி உக்ரைன் உள்ளிட்ட அணுசக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராகவும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும்.. என்று புடின் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் ரஷ்யாவின் கொள்கை மாற்றத்திற்கு அதிபர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார்.

donald trump vladimir putin ukraine russia war

இதற்கெல்லாம் காரணம் என்று பார்த்தால் ஒரு வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன்தான். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் செய்த தவறு காரணமாக.. உலக அளவில் அணு ஆயுத போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதன்படி அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்யா மீது பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் பிடன் அனுமதி அளித்துள்ளார். அவரின் இந்த முடிவை ரஷ்ய அதிபர் புடின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புடினின் விமர்சனத்தில், அமெரிக்காவின் இந்த முடிவிற்கு உடனடியாக பதிலடி தரப்படும். அமெரிக்காவின் இந்த முடிவு நாங்கள் நேட்டோவுடன் நேரடி போரில் இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது, என்று கூறி உள்ளார். அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்யா மீது பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கினால் நாங்கள் நேட்டோவுடன் நேரடி போரில் இருக்கிறோம் என்று அர்த்தம் என்று புடின் ஏற்கனேவே கூறி இருந்த நிலையில்தான் பிடன் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அமெரிக்கா அதிபர் பிடனின் ஆட்சி காலம் இந்த மாதத்தோடு முடிகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் நீண்ட தூர எல்லைகளுக்கு சென்று தாக்கும் அமெரிக்க ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு பிடன் அனுமதி வழங்கி உள்ளார். ரஷ்யா மீது தாக்குதல் நடத்த வசதியாக இந்த உத்தரவை பிடன் பிறப்பித்துள்ளார். இத்தனை காலமாக.. நீண்ட தூர எல்லைகளுக்கு சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது.

இதனால் ரஷ்யாவை கடுமையாக தாக்க முடியாமல் உக்ரைன் தவித்து வந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைன் இனி நீண்ட தூரத்திற்கு செல்லும் ஏவுகணைகளை இனி பயன்படுத்தலாம் என்று பிடன் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவிற்கு இது மிகப்பெரிய சிக்கலாக மாறி உள்ளது.

சமீபத்தில்தான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் பேசி, உக்ரைனில் போரை நிறுத்த வேண்டும்.. இதற்கு மேல் போரை அதிகரிக்க கூடாது. தற்போது உள்ள நிலை தொடர வேண்டும் . அதோடு அமைதி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த போன்கால் சுமார் 15 நிமிடம் நீடித்ததாக கூறப்படுகிறது.

இரண்டு தரப்பும் போரை நிறுத்த வேண்டும் என்று இவர் மத்தியசம் பேசி உள்ளார். டிரம்ப் மத்தியசம் பேசியதற்கு இடையே.. தற்போது பிடன் ரஷ்யாவை சீண்டும் விதமாக உக்ரைனுக்கு புதிய பவர் வழங்கி உள்ளார். நீண்ட தூர எல்லைகளுக்கு சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு பிடன் அனுமதி வழங்கி உள்ளார். ரஷ்யா மீது தாக்குதல் நடத்த வசதியாக இந்த உத்தரவை பிடன் பிறப்பித்துள்ளார். இது ரஷ்யாவை மேலும் கோபத்திற்கு உள்ளாக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+