Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

42 வயசு கணக்கு வாத்தியார்.. 43 வயசு பெண் இன்ஜினியருடன் "உறவு"! கையோடு செய்த பகீர்.. அதிர்ந்த ஜெர்மனி

Subscribe to Oneindia Tamil

பெர்லின்: மனித மாமிசத்துக்காக ஒருவரை கொன்று தின்ற சம்பவம் ஜெர்மனியின் நடந்திருக்கிறது.

ஜெர்மனியில் உள்ள பாங்கோ நகரத்தில் இணைய டேட்டிங் தளத்தில் சந்தித்தவரை கொன்று, உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டிய குற்றத்துக்காக முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது ஒரு ஜெர்மனி நீதிமன்றம்.

ஜெர்மனி நகரில் வசித்து வருகிறார் 42 வயதாகும் ஸ்டீபன். இவர், தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றியவர்.

டேட்டிங்

டேட்டிங்

ஸ்டீபனும் பெண் பொறியாளர் ஒருவரும் டேட்டிங் தளத்தில் சந்தித்துக் கொண்டனர். அந்த பொறியாளருக்கு 43 வயது. அவருக்கு மகன் ஒருவர் இருந்தார். டேட்டிங் தளத்தில் ஸ்டீஃபன் தன்னை CanOpener79 என அழைத்துக் கொண்டதாக பெர்லின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஸ்டீபனும் பொறியாளரும் டேட்டிங் தளத்தில் பேசி உறவை வளர்த்திருந்தனர். இந்நிலையில் பாங்கோ நகரில் இருக்கும் ஸ்டீவனின் வீட்டில் இருவரும் சந்தித்துக்கொள்ள திட்டமிட்டிருக்கிறார்கள். அதையடுத்து அந்த பொறியாளர் சம்பவத்தன்று ஸ்டீபன் வீட்டுக்கு வந்திருக்கிறார். இருவரும் உடலுறவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மறுநாள் காலை அந்தப் பெண் இறந்து போயுள்ளார்.

இனப் பெருக்க உறுப்புகள்

இனப் பெருக்க உறுப்புகள்

ஸ்டீஃபன் ஒரு வாடகை காரைப் பயன்படுத்தி, பொறியாளரின் உடல் பாகங்களை பங்கோ மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் பல பாகங்களில் வீசி எறிந்தார். பொறியாளரின் உடலில் இனப்பெருக்க உறுப்புகளை மட்டும் காணவில்லை. பொறியாளரின் உடல் பாகங்கள் நவம்பர் 2020-ல் ஒரு பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து விசாரணை நடந்தது. அந்த விசாரணையில் ஸ்டீபன் மாட்டிக்கொண்டார். மனித மாமிசத்தைப் புசிக்கும் தன் விருப்பத்துக்காக, மின் பொறியாளர் ஒருவரைக் கொன்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

விசாரணை ஆரம்பம்

விசாரணை ஆரம்பம்

கொலை செய்யப்பட்டவரின் எலும்புகள், வடக்கு பெர்லினில் உள்ள ஒரு பூங்காவில் பொது மக்களால் கண்டுபிடிக்கப்பட்ட பின், கடந்த நவம்பர் 2020-ல் கைது செய்யப்பட்டு தடுப்புப் காவலில் வைக்கப்பட்டார் ஸ்டீஃபன். ஸ்டீஃபன் இதற்கு முன், மனித மாமிசத்தை உண்பது குறித்து விவாதித்த இணையதள சாட்களில் கலந்து கொண்டுள்ளார் என்பது போலீஸ் விசாரனையில் தெரியவந்தது. அதோடு, ஸ்டீபன் வீட்டில் எலும்பை அறுக்கும் ரம்பம் மற்றும் இறைச்சி வெட்டுபவர்கள் பயன்படுத்தும் கத்தி ஆகியவற்றைக் கண்டுபிடித்ததாகவும் விசாரணை போலீஸார் தெரிவித்தனர்.

கொலை

கொலை

கொலை என வரையறுப்பதற்கான எல்லா விஷயங்களும் ஒத்துப் போகின்றன. பொறியாளர் ஆசை வார்த்தைகளால் மயக்கப்பட்டு பொறியில் சிக்க வைக்கப்பட்டு, கொலையாளி தன் பாலுறவு ரீதியிலான ஆசைகளை தீர்த்துக் கொண்ட பின், மேற்கொண்டு குற்றங்களைச் செய்திருக்கிறார் என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மேலும் இவர் காணாமல் போன உறுப்பை தின்றிருக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். மனித மாமிசத்தைப் புசிக்கும் தன் விருப்பத்துக்காக, பொறியாளர் ஒருவரைக் கொன்றதாக பெர்லின் நீதிமன்ற நீதிபதி கருத்துக் கூறியுள்ளார். இந்த நிகழ்வு ஜெர்மனியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+