பாக்.கில் பயங்கரம்... பர்மிஷன் இல்லாமல் வெளியில் சென்ற பெண் உயிரோடு எரித்துக் கொலை - கணவர் கைது
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அனுமதியின்றி வெளியே சென்ற பெண்ணை உயிரோடு எரித்துக் கவுரவக் கொலை செய்த கணவர் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் முசாபர்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது சித்திக். இவரது மனைவி ஷபானா பீபி (25). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சமீபத்தில் ஷபானா பீபி தனது தங்கையை சந்திக்க கணவர் அனுமதி பெறாமல் வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சித்திக், வீடு திரும்பிய ஷபானாவை அடித்து உதைத்துள்ளார்.

பின்னர் தனது தந்தையுடன் சேர்ந்து, ஷபானாவின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த ஷபானா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய முசாபர்கர் போலீசார், ஷபானாவின் கணவர் சித்திக் மற்றும் அவரது தந்தையைக் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் இது போன்ற காரணங்களுக்காக 2008-ம் ஆண்டில் இருந்து இதுவரை 3 ஆயிரம் பெண்கள் கவுரவக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு தனியார் அறக்கட்டளை ஒன்று தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications