மக்களைக் கொல்வதில் நான் நல்லவன், இல்லையா?... ஒபாமா கூறியதாக புதிய பரபரப்பு!
வாஷிங்டன்: பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் அமெரிக்கப் படையினர் நடத்தும் ஏவுகணைத் தாக்குதல் குறித்து தனது உதவியாளர்களிடம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியதாக கூறப்படும் ஒரு கருத்து குறித்து புதிதாக வெளியாகியுள்ள ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கருத்து பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த நூலில், ஏவுகணைத் தாக்குதல் குறித்து தனது உதவியாளர்களிடம், மக்களைக் கொல்வதில் நான் சிறப்பாக செயல்படுவதாக நினைக்கிறேன் என்று ஒபாமா கூறியதாக இடம் பெற்றுள்ளது. இதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2009ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர் ஒபாமா என்பது நினைவிருக்கலாம்.

'Double Down: Game Change 2012'
2012ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஒபாமா மேற்கொண்ட பிரசாரம் குறித்த புத்தகம்தான் இது.

பத்திரிக்கையாளர்களின் புத்தகம்
லண்டனைச் சேர்ந்த மார்க் ஹால்பெரின், ஜான் ஹெய்ல்மென் ஆகிய இரு புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் இந்த நூலை எழுதியுள்ளனர். இதில் ஒபாமா குறித்த பல பரபரப்புத் தகவல்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

பாகிஸ்தான், ஏமன் தீவிரவாதிகள் மீது
பாகிஸ்தான், ஏமன் நாட்டில் செயல்படும் தீவிரவாதிகள் மீது அமெரிக்கப் படையினர் நடத்தும் துரோன் எனப்படும் ஏவுகணைத் தாக்குதல் குறித்த பல முக்கியத் தகவல்களை இதில் அவர்கள் கொடுத்துள்ளனர்.

326 தாக்குதல்களுக்கு ஒப்புதல் கொடுத்த ஒபாமா
இந்த நூலில், ஒபாமா அதிபரான பின்னர் மொத்தம் 326 துரோன் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

2004 முதல் 3600 பேர் பலி
கடந்த 2004ம் ஆண்டு முதல் துரோன் தாக்குதல்களில் 2500 முதல் 3600 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 950 பேர் பொதுமக்கள் ஆவர்.

மக்களைக் கொல்வதில் நல்லவன்
துரோன் தாக்குதல்கள் குறித்து தனது நெருங்கிய உதவியாளர்களிடம் ஒபாமா, மக்களைக் கொல்வதில் நான் நல்லவனாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் என்று நூலில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை அமைதி
இந்த நூலில் இடம் பெற்றுள்ள கருத்து குறித்து அதிபர் மாளிகை இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

ஒபாமாவின் ஆலோசகரின் விளக்கம்
அதேசமயம், ஒபாமாவின் ஆலோசகரான டேன் பீபர் கூறுகையில், எப்போதுமே தகவல் கசிவுகள் அதிபரை எரிச்சலூட்டுகின்றன. இந்த நூல் குறித்து நான் அதிபருடன் இதுவரை பேசவில்லை. அவரும் இதைப் படிக்கவில்லை. ஆனால் இப்படிப்பட்ட கசிவுச் செய்திகளை அவர் வெறுக்கிறார் என்றார்.

அமைதிப் பரிசு பெற்றவர் இப்படியா பேசுவது..
2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் உலக அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் ஒபாமா. அப்படிப்பட்டவர் இப்படியா பேசுவது என்ற சலசலப்பு தற்போது கிளம்பியுள்ளது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications