இந்தியாவின் துரோகி.. பாகிஸ்தானுக்கு அல்லா கருணை கிடைக்கனும்.. துருக்கி அதிபர் கூறியதை பாருங்க
அங்காரா: நம் நாட்டை சீண்டி பாகிஸ்தான் பெரிய பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது. பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் நம் நாட்டின் ஏவுகணைகள் பதம் பார்த்துள்ளன. நாளுக்க நாள் இருநாடுகள் இடையேயான மோதல் என்பது வலுத்து வருகிறது. இந்நிலையில் தான் நம் நாட்டுக்கு எதிர் நிலைப்பாடு கொண்ட துருக்கி அதிபர் எர்டோகன் பாகிஸ்தானுக்கு அல்லாவின் கருணை கிடைக்க பிரார்த்திக்கிறேன் என்று கூறி பயங்கரவாதிகளின் மீதான தாக்குதலை கண்டித்துள்ளார்.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் என்பது உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த மோதலை தொடங்கியதே பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தான் . பஹல்காமில் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 சுற்றுலா பயணிகளை கொன்றனர். இதற்கு பதிலடி கொடுத்து பாகிஸ்தானின் 9 பயங்கரவாதிகளின் முகாம்களை நம் நாடு தகர்த்தது.

இதையடுத்து பாகிஸ்தானின் நம்மை தாக்க தொடங்கி உள்ளது. இந்த முறை பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை, ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்களை ஏவி நம்மை தாக்க முயற்சித்தது. அதனை நம் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். இதற்கும் நம் நாடு பதிலடி கொடுத்து பாகிஸ்தானின் கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் ஏவுகணை, ட்ரோன்களை வைத்து அட்டாக் செய்துள்ளது.
துருக்கி அதிபர் மாளிகை அறிக்கை
இதனால் பாகிஸ்தான் நிலைக்குலைந்து போய் உள்ளது. தற்போது வரை பாகிஸ்தானுக்கு 2 நாடுகள் மட்டுமே வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளன. ஒன்று துருக்கி. மற்றொன்று அஜர்பைஜான். இந்த 2 நாடுகளும் இஸ்லாமிய நாடுகளாகும். இருநாடுகளும் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நாம் நடத்திய தாக்குதலை கண்டித்துள்ளதோடு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் தான் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் , பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் துருக்கி அதிபர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 7 ம் தேதி பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை நம் நாடு ஏவுகணைகளை தாக்கி அழித்தது. அதன்பிறகு துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் பேசி ஆறுதல் கூறினார். பாகிஸ்தானுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தினார். இக்கட்டான சூழலை கையாள்வதற்கு துருக்கி ஆதரிப்பதாக தெரிவித்தார்.பதற்றம் அதிகரிப்பதை தடுக்க துருக்கி தன்னால் முடிந்த அனைதது உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும், இதற்கான தூதரக ரீதியிலான தொடர்புகள் தொடரும் என்று கூறினார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லாவின் கருணை
முன்னதாக எர்டோகன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‛‛"பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான பதற்றம், ஏவுகணை தாக்குதல் என்பது பொதுமக்களின் உயிரை பலி வாங்கி உள்ளது. இது இருநாடுகள் இடையேயான வெளிப்படையான மோதலாக விரிவடையும் என்று கவலைப்படுகிறோம்.
தாக்குதல்களில் உயிரிழந்த நமது சகோதரர்களுக்கு அல்லாவின் கருணை கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன். பாகிஸ்தான் சகோதர மக்களுக்கும், அரசுக்கும் மீண்டும் ஒருமுறை எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
பாகிஸ்தானை தூக்கி பிடிக்கும் எர்டோகன்
முன்னதாக பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இதுதான் தற்போதைய மோதலுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வந்தபோது பாகிஸ்தான் பயந்துபோனது. நியாயமான சர்வதேச விசாரணைக்கு தயார் என்று பாகிஸ்தான் தெரிவித்தது. ஆனால் அதனை நம் நாடு ஏற்காத நிலையில் துருக்கி அதிபர் எர்டோகன், ஜம்மு காஷ்மீரில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற பாகிஸ்தானின் முடிவு மதிப்புமிக்கது என்று கூறினார்.
பாகிஸ்தானில் நம் நாடு நடத்திய தாக்குதலில் அப்பாவிகள் யாரும் பலியாகவில்லை. இறந்தவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் தான். ஆனால் கூட துருக்கி அதிபர் எர்டோகன் இன்னும் திருந்தவில்லை. தொடர்ந்து பாகிஸ்தானை தூக்கிப்பிடித்து ஆதரவு தெரிவித்து வருகிறார். மேலும் இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் துருக்கி பாகிஸ்தான் பக்கம் சாய்வது இது முதல் முறையல்ல. காஷ்மீர் விவகாரம் உள்பட பல விஷயங்களில் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் தான் துருக்கி உள்ளது.
துருக்கியை துரோகி என சொல்வது ஏன்?
துருக்கி இப்படி செயல்பட்டாலும் கூட நம் நாடு அதனை எப்போதும் நண்பனாக தான் பார்த்து வருகிறது. ஆனால் துருக்கி அப்படி நம்மை எண்ணுவது இல்லை. உதாரணமாக கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டங்கள் இடிந்து பொதுமக்கள் கொத்து கொத்தாக பலியாகினர். அந்த சமயத்தில் நம் நாடு துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவி செய்தது.
ஆபரேஷன் தோஸ்த் என்ற பெயரில் பேரிடர் மீட்பு படையினர், மருத்துவர்கள் என்று 250 பேரை இந்தியா அனுப்பி வைத்தது. அதுமட்டுமின்றி 135 டன் அளவுக்கு நிவாரண பொருட்களை வழங்கியது. இதுதவிர சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் துருக்கி கேட்டு கொண்டதன் பேரில் நம் நாட்டின் பல்வேறு முன்னணி நகரில் இருந்து நேரடியாக அங்கு விமான சேவை தொடங்கப்பட்டது.
ஆனாலும் கூட இதனை துருக்கி நினைத்து பார்ப்பது இல்லை. மேலும் துருக்கி ட்ரோன் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது. இந்த ட்ரோன்களை இந்தியாவுக்கு வழங்க மறுத்து வருவதோடு, பாகிஸ்தானுக்கு கொடுத்து உதவி செய்து வருகிறது. இதுதவிர சமீபத்தில் வங்கதேசத்துக்கும், நமக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியாவை நம்ப வேண்டாம். இந்தியாவுக்கு பதில் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக துருக்கி சார்பில் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸிடம் கூறப்பட்டது. இப்படி தொடர்ச்சியாக துருக்கி நம்மை சீண்டி துரோகம் செய்து வரும் நிலையில் இப்போதும் பாகிஸ்தான் பக்கம் சாய்ந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications