"பத்தாயிரம் பேருடன் நான்..."- சுய சரிதை புத்தகத்தில் சொன்ன பெண்மணி
கான்பெரா: "நான் பத்தாயிரம் பேருடன் படுக்கையை பகிர்ந்தவள்" என்று விபச்சார தொழிலில் கொடிகட்ட பறந்த 36 வயது பெண்மணி தனது சுயசரிதை புத்தகத்தில் பெருமையோடு தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரை சேர்ந்தவர் ஜிவைனத் மோன்டேனேக்ரோ. தற்போது 36 வயதாகும் இப்பெண்மணி தனது 21 வயதில் பாலியல் தொழிலுக்குள் புகுந்தார். தற்போது ஓய்வு எடுத்துவிட்டு வேறு தொழில் செய்து வரும், ஜிவைனத் தனது அனுபவங்களை சுயசரிதை புத்தகமாக்கி வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் கூறியுள்ளதாவது:

பலாத்காரம்
நான் 18வது வயதில் கிளப் ஒன்றுக்கு சென்றபோது, சிலரால் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டேன். அதன்பிறகு எனக்கு இயல்பான கூச்சம் குறைந்துவிட்டது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியது.

பார்களில் குத்தாட்டம்
அப்போதுதான், பார்களில் நடனமாட இளம் பெண் தேவை என்ற பத்திரிகை விளம்பரம் எனது கண்ணில் பட்டது. இதையடுத்து 19வயது வயதில் பாரில் நடனமாட சென்றேன். முதல் நாள் இரவு ஆட்டத்திற்கே 1000 டாலர்கள் சம்பளமாக கிடைத்தது. பஸ்சில் ஏறி, இறங்குவதை போல இந்த வேலை எனக்கு மிகுந்த எளிதாக பட்டது.

பெற்றோரிடம் மறைப்பு
இதன்பிறகு மேலும் பணம் சம்பாதிக்கவும், மது குடிக்கவும் ஆசை வந்தது. இதற்காக 21வது வயதில், விபச்சார தொழிலில் இறங்கினேன். அதிலும் நல்ல வருவாய் கிடைத்தது. கார், உடைகள் வாங்கி குவித்தேன். இருப்பினும் எனது பெற்றோரிடம், உண்மையை மறைத்துவிட்டேன். மாடலிங் மூலம் பணம் கிடைப்பதாக அவர்களிடம் கூறி வந்தேன்.

கடல் கடந்தும் விபச்சாரம்
சுமார் மூன்று வருடங்கள், ஆஸ்திரேலியாவில் விபச்சாரம் செய்த பிறகு, வெளிநாடுகளிலும் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளார் ஜிவைனத். விபச்சாரம் எங்கெல்லாம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதோ, அந்த நாடுகளில் இவர் சென்று விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் சமூகத்தில் உயர்ந்த பதவிகளில் இருப்போரின் பழக்கம் இவருக்கு கிடைத்துள்ளது.

அனைத்து தரப்பும் இவர் படுக்கையில்..
அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், இசைக்கலைஞர்கள் ஆகியோர் ஜிவைனத்துடன் உடல் உறவு கொண்டதாக தனது புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், 24வயது வயதில் ஒரு சாலை விபத்தில் சிக்கியுள்ளார். அப்போது உயிர் பிழைத்ததே பெரிய விஷயமாகிவிட்டது. இதனால் மேலும் மறைக்க மனமில்லாமல், தனது பெற்றோரிடம் தனது விபச்சார தொழில் குறித்த உண்மையை கூறிவிட்டார்.

பறக்க ஆரம்பித்தார்..
இந்நிலையில் 29வயதில் ஜிவைனத் ஆசைப்பட்டபடி, பைலட் வேலை கிடைத்துள்ளது. இதனால் சிறிது காலம் விபச்சாரத்தைவிட்டு விலகியிருந்தார் ஜிவைனத். ஆனால், கிட்னி பிரச்சினை காரணமாக, பைலட் வேலைக்கான லைசென்ஸ் பறிக்கப்பட்டதும் மீண்டும் விபச்சாரத்தில் இறங்கியுள்ளார்.

ஓய்வு காலம்..
இருப்பினும் 33வயது வயது முதல் உளவியல் தொடர்புள்ள வணிகத்தில் இறங்கியதால் விபச்சாரத்தை முற்றிலுமாக விட்டுவிட்டாராம். இதுவரை 10 ஆயிரத்து 91 ஆண்களுடன் உடலுறவு கொண்டுள்ளதாக தனது புத்தகத்தில் ஜிவைனத் தெரிவித்துள்ளார். அம்மாடியோவ்...
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications