சிறுமியாக இருந்தபோது செக்ஸ் துன்புறுத்தலுக்குள்ளானேன்.. மண்டேலா பேத்தி

Subscribe to Oneindia Tamil

ஜோஹன்னஸ்பர்க்: நான் சிறுமியாக இருந்தபோது என்னைப் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டியவர்களாலேயே நான் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானேன் என்று தென் ஆப்பிரிக்காவின் முதுபெரும் தலைவரான நெல்சன் மண்டேலாவின் பேத்தி ஜுலேகா மண்டேலா கூறியுள்ளார்.

தற்போது 33 வயதாகும் ஜூலேகா Frank memoir When Hope Whispers என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார். அதில்தான் இதைக் கூறியுள்ளார்.

ஜூலேகாவின் 13 வயது மகள் ஜெனானி, கடந்த 2010ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி தொடங்கிய சமயத்தில் விபத்தில் மரணமடைந்தார் என்பது நினைவிருக்கலாம். அதுகுறித்தும் தனது நூலில் ஜூலேகா எழுதியுள்ளார்.

மேலும் புற்றுநோய்க்கு எதிராகவும், போதைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காகவும் தான் பத்தாண்டு காலம் போராடியதைப் பற்றியும் எழுதியுள்ளார் ஜூலேகா.

மண்டேலா விடுதலையானபோது

மண்டேலா விடுதலையானபோது

நெல்சன் மண்டேலா தனது நீண்ட சிறைவாசத்தை முடித்து விட்டு வெளியே வந்தபோது ஜுலேகாவுக்கு 10 வயதாகும்.

8 வயது முதல் 14 வயது வரை பட்ட சித்திரவதை

8 வயது முதல் 14 வயது வரை பட்ட சித்திரவதை

'எனக்கு 8 வயதாக இருந்தபோது நான் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானேன். இந்தக் கொடுமை 14 வயது வரை தொடர்ந்தது. என்னைப் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டியவர்களே இந்தக் கொடுமையைச் செய்தனர் என்பதுதான் வேதனை.

என் தாயார் மட்டும் இருந்திருந்தால்

என் தாயார் மட்டும் இருந்திருந்தால்

எனக்கு ஏற்பட்ட பல ஆண்டு கால கொடுமைகளுக்கு எனது தாயார் ஜிந்த்ஸி மண்டேலாவும் மறைமுகமாக ஒரு காரணம். அவர் என்னுடன் இல்லாததால்தானே இந்தக் கொடுமைகளை நான் சந்திக்க நேரிட்டது.

அவர் என்னைக் காத்திருப்பார்

அவர் என்னைக் காத்திருப்பார்

அவர் மட்டும் என்னுடன் இருந்திருந்தால், என்னைப் பராமரித்திருந்தால் இதிலிருந்து நான் தப்பியிருக்கலாமே... ஆனால் அவர் பாவம் என்ன செய்வார்...

துப்பாக்கியில் கை தேர்ந்தவர் என் தாயார்

துப்பாக்கியில் கை தேர்ந்தவர் என் தாயார்

எனது தாயார் துப்பாக்கியைக் கையாளுவதில் கை தேர்ந்தவர். ஏகே 47 துப்பாக்கியை அவரிடம் கொடுத்தால் 38 விநாடிகளில் அதைக் கழற்றி மறுபடியும் மாட்டி விடுவார்.

இரு குழந்தைகளையும் இழந்தவர்

இரு குழந்தைகளையும் இழந்தவர்

நான் எனது இரு குழந்தைகளையும் பறி கொடுத்து விட்டேன். முதல் குழந்தை பிறந்ததுமே இறந்து விட்டது. இதனால் வேதனையுற்ற நான் தற்கொலைக்கு முயன்றேன். அப்போது நான் கொகைனுக்கு அடிமையாக இருந்தேன்.

13 வயது மகளைப் பறி கொடுத்தபோது உடைந்து விட்டேன்

13 வயது மகளைப் பறி கொடுத்தபோது உடைந்து விட்டேன்

எனது இளைய மகள் தனது 13வது வயதில் 2010ம்ஆண்டு சாலை விபத்தி்ல இறந்தபோது நான் இதயம் நொறுங்கிப் போய் விட்டேன்.

3வது குழந்தை பிறந்து இறந்த கொடுமை

3வது குழந்தை பிறந்து இறந்த கொடுமை

அதன் பின்னர் நான் 2011ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையைப் பெற்றேன். ஆனால் அது பிறந்ததும் இறந்து விட்டது. நான் பட்ட கொடுமைகள் நிறைய.. இன்னும் வேதனையைத் தருகின்றன அவை என்று கூறியுள்ளார் ஜூலேகா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+