For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிங்கப்பூர் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் கிம்மை அமெரிக்காவுக்கு அழைப்பேன்: ரெடியாகும் டிரம்ப்!

சிங்கப்பூர் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் கிம்மை அமெரிக்காவுக்கு அழைப்பேன் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் கிம்மை அமெரிக்காவுக்கு அழைப்பேன்: டிரம்ப்!- வீடியோ

    வாஷிங்டன்: சிங்கப்பூர் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் கிம்மை அமெரிக்காவுக்கு அழைப்பேன் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    பெரும் சர்ச்சைகளுக்கு இடையே வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேசவுள்ளனர்.

    அவர்கள் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் காலை 9 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

    அழைப்பு விடுப்பேன்

    அழைப்பு விடுப்பேன்

    இந்நிலையில், அடுத்த வாரம் சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பேன் என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    ஜப்பான் பிரதமர் சந்திப்பு

    ஜப்பான் பிரதமர் சந்திப்பு

    இந்த சந்திப்பு குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பை சந்தித்து பேசினார்.

    புதிய எதிர்காலத்தின் தொடக்கம்

    புதிய எதிர்காலத்தின் தொடக்கம்

    அதன்பின்னர் புளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னுடன் சிங்கப்பூரில் நடக்க உள்ள சந்திப்பு வட கொரியாவிற்கு ஒரு புதிய எதிர்காலத்தின் தொடக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

    அடுத்த 5 நாட்களுக்குள்

    அடுத்த 5 நாட்களுக்குள்

    இதனால் உலகிற்கே ஒரு பிரகாசமான புதிய எதிர்காலம் உருவாகும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். இந்த சந்திப்பு சுமூகமாக முடிந்தால் அடுத்த 5 நாட்களுக்குள் கிம் ஜாங் உன்னை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பேன் என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

    ரத்தானது

    ரத்தானது

    ஏற்கனவே இருநாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்தில் ஏற்பட்ட வார்த்தை போரால் ட்ரம்ப் - கிம் ஜாங் உன் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக கடந்த மாதம் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    English summary
    US president Donald Trump says If the talk between Kim jong un is going smoothly we would call Kim to US.Trump and Kim going to meet on coming 12th in Singapore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X