ஆளில்லா விமானத் தாக்குதல்: அமெரிக்காவுக்கு கெடு விதித்து இம்ரான்கான் பதிலடி

பாகிஸ்தானின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல், ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகள் அவ்வப்போது பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தலிபான் தீவிரவாதிகள் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் சிக்கி பாகிஸ்தான் தலிபான் தலைவர் ஹக்கிமுல்லா மசூத் பலியானார். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் எதிர்கட்சி தலைவர்களில் ஒருவரான இம்ரான்கான், ‘அமெரிக்கத் தாக்குதலுக்கு கெடு விதித்துள்ளார். மேலும், இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ‘பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்கா அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பலமுறை கண்டித்தும் அமெரிக்கா தனது அத்துமீறலை நீடித்து வருகிறது. இதற்கு இனிமேலும் அனுமதிக்க மாட்டோம்.
வருகிற 20-ந் தேதியுடன் அவர்களை தாக்குதலை நிறுத்தி கொள்ளவேண்டும். இதற்கு மேலும் தாக்குதல் நீடித்தால் பாகிஸ்தானிலிருந்து கைபர் கனவாய் வழியாக ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளுக்கு உணவு மற்றும் பொருட்கள் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்துவோம். அமெரிக்காவுக்கு எதிரான எங்களது பதிலடி கடுமையாக இருக்கும்' என எச்சரித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications