இந்தியாதான் காரணம்.. நேபாளத்திற்கு ஆதரவாக களமிறங்கும் இம்ரான் கான்.. மூன்று நாடுகளின் பகீர் வியூகம்!
காத்மண்டு: நேபாளத்தின் பிரதமர் கே பி சர்மாவின் ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் சர்மாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவிற்கு எதிராக நேபாளம் வரைபடம் வெளியிட்டதில் இருந்தே நேபாளத்தில் அந்நாட்டு பிரதமர் கேபி சர்மாவிற்கு எதிராக குரல்கள் எழ தொடங்கி உள்ளது. இந்தியாவில் பீகார் அருகே இருக்கும் லீபுலேக், கல்பாணி, லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டிற்குள் கொண்டு வந்து நேபாளம் வரைபடம் வெளியிட்டது.
நேபாளத்தின் இந்த புதிய வரைபடத்திற்கு இந்தியா கடுமையான கண்டனம் தெரிவித்து இருந்தது. அதேபோல் அந்த நாட்டை சேர்ந்த ஆளும் கட்சியை சேர்ந்த தலைவர்களே பிரதமர் கேபி சர்மாவிற்கு எதிராக குரல் கொடுத்தனர்.

என்ன புரட்சி
இந்த நிலையில் நேபாளத்தில் தன்னுடைய ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுகிறார்கள். உள்ளூர் அரசியல்வாதிகளை வைத்து என்னுடைய ஆட்சியை கவிழ்க்க இந்தியா திட்டம் போடுகிறது. இந்தியாவிற்கு எதிராக மேப் வெளியிட்டதால் இந்தியா எனது ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறது. இந்தியாவின் இந்த சதியை முறியடிப்பேன் என்று பிரதமர் கேபி சர்மா குறிப்பிட்டு இருந்தார். இந்தியாவிற்கு எதிராக அப்பட்டமான குற்றச்சாட்டை அவர் வைத்து இருந்தார். இந்த நிலையில் இன்று ஆளும் கட்சியான நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நடந்தது.

பதவி விலக கோரிக்கை
இன்று நடந்த கூட்டத்தில் பிரதமர் கேபி சர்மாவிற்கு எதிராக அந்த கட்சியின் மூத்த உறுப்பினர்கள், முன்னாள் பிரதமர்கள் கடுமையாக குரல் எழுப்பினார்கள். பிரதமர் கேபி சர்மா கண்டிப்பாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் .கட்சியின் மூத்த தலைவர்கள் புஷ்ப கமல் தாஹல் பிரச்சந்தா, மாதவ் குமார், ஜல்நாத் காணல் ஆகியோர் அரசுக்கு எதிராக குதித்துள்ளனர். கட்சி தலைவர், ஆட்சி தலைவர் இரண்டு பதவியிலும் சர்மா இருக்க கூடாது என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

பெரும் குழப்பம்
இதனால் பிரதமர் கேபி சர்மா என்ன செய்வது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருக்கிறார். நேபாளத்தின் பிரதமர் கே பி சர்மாவின் ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் சர்மாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு தெரிவித்துள்ளார். பிரதமர் கே பி சர்மாவிற்கு தன்னுடைய முழுமையான ஆதரவை தருவதாக இம்ரான் கான் தெரிவித்து இருக்கிறார். நேபாளத்தில் ஆட்சியை கவிழ்க்க இந்தியா சதி செய்கிறது.

ஆட்சி கவிழும்
அங்கு ஆட்சியை கவிழ பாகிஸ்தான் விடாது. நாங்கள் பிரதமர் கே பி சர்மாவிற்கு முழு ஆதரவு தருகிறோம் என்று இம்ரான் கான் ஆதரவை தெரிவித்துள்ளார். பிரதமர் கே பி சர்மா உடன் இம்ரான் கான் தொலைபேசியில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கு எதிராக நேபாளம் செயல்படும் நிலையில் தற்போது நேபாளத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எடுத்துள்ளார்.

சீனாவின் தொடர்பு
ஏற்கனவே நேபாளத்தின் அரசுக்கு சீனா தீவிரமாக ஆதரவு தெரிவித்து வருகிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் நேபாளத்திற்கு பின் இருந்து சீனாதான் இயக்குகிறது என்றும் குற்றச்சாட்டு உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் தற்போது நேபாளத்தின் பிரதமர் சர்மாவிற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்துள்ளது. இந்தியாவிற்கு எதிராக எல்லையில் உள்ள மூன்று நாடுகள் மோசமான வியூகங்களை வகுக்க தொடங்கி உள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications