திருமண விழாவில் தற்கொலை தாக்குதல்.. உடல் சிதறி 7 பேர் பலி - -25 பேர் படுகாயம்.. அதிர்ச்சி வீடியோ

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் திருமண விழாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கட்டம் இடிந்து தரைமட்டமான நிலையில் 7 பேர் பலியாகினர். 25 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகிஅதிர வைத்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய மாகாணமாக கைபர் பக்துன்க்வா உள்ளது. இது பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு டேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் பாகிஸ்தான் அரசு ஆதரவாளராக நூர் ஆலம் மெஹ்சுத் உள்ளார்.

இவரது வீட்டில் திருமண விழா நடந்தது. இந்த விழாவில் இரவு நேரத்தில் உறவினர்கள் பங்கேற்று நடனமாடி கொண்டிருந்தனர். அப்போது திருமண வீட்டுக்குள் நுழைந்த நபர் தற்கொலை படை தாக்குதல் நடத்தினார்.

மர்மநபர் தனது இடுப்பில் வெடிகுண்டை கட்டி வைத்து வந்து அதனை வெடிக்க செய்தார். அதில் அந்த நபர் உடல் சிதறி பலியானார். குண்டு வெடிப்பு சத்தம் கேட்டு மற்றவர்களும் அலறியடித்து ஓடினர். அதற்குள் கட்டடம் இடித்து விழுந்தது. இதில் மொத்தம் 7 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களில் அரசிடம் சரணடைந்த முன்னாள் பயங்கரவாதியான ஒருவரும், அவரது குடும்பத்தினரும் அடங்குவர். மேலும் அமைதி குழுவின் தலைவராக இருக்கும் வாகிதுல்லா மெஹ்சுத் என்ற ஜிக்ரி மெஹ்சுத் என்பவரும் இறந்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்த பயங்கரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தான் தாலிபான் (TTP) என்று அறியப்படும் தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பை சேர்ந்தவர்கள் தான் இந்தத் தற்கொலை தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. ஏனென்றால் இந்த அமைப்பினர் தான் தற்போது கைபர் பக்துன்க்வாவில் அரசுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்த மாத தொடக்கத்தில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பண்ணு மாவட்டத்தில் நான்கு அமைதிக் குழு உறுப்பினர்கள் துப்பாக்கி சுட்டு கொல்லப்பட்டனர். அதேபோல் 2025 நவம்பரில் அமைதிக் குழு அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். இந்தத் தொடர் வன்முறைச் சம்பவங்கள், அப்பகுதியில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலையும், அங்குள்ள சவால்களையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. இதனால் டிடிபி அமைப்பை சேர்ந்தவர்கள் தான் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

இதற்கிடையே தான் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த வீடியோ வெளியாகி உள்ளது. அதில் திருமண விழாவில் விருந்தினர்கள் மேள, தாளத்துடன் நடனமாடி வரும்போது திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்து சிதறுவதும், மக்கள் அலறியபடி ஓடுவதும் பதிவாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+