வழிக்கு வந்த சீனா.. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்!
ரியோ டி ஜெனிரோ: சமீபத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பஹல்காம் தாக்குதல் குறித்த கண்டனம் தெரிவிக்கப்படாததால், இந்தியா இதன் கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டது. இதனையடுத்த பிரிக்ஸ் மாநாட்டில் இந்த தாக்குதலுக்கு கண்டம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து பிரிக்ஸ் பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
இந்தியா, ரஷியா, சீனா, ஈரான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், பெலாரஸ் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய அமைப்புதான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு. இந்த அமைப்பின் மாநாடு சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் நடைபெற்றது. இந்தியாவிலிருந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றிருந்தார்.

ஆனால், இந்த மாநாட்டில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும், பஹல்காம் தாக்குதல் குறித்தும் எந்த கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை. இதனையடுத்து இதன் கூட்டறிக்கையில் இந்தியா சார்பில் ராஜ்நாத் சிங் கையெழுத்திட மறுத்துவிட்டார். இந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்திருந்தது.
இந்நிலையில், தற்போது நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பஹல்காம் தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து பிரிக்ஸ் கூட்டறிக்கையில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. பிரிக்ஸ் பிரகடனத்தில், "ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம், இதில் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்று இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இது பிரிக்ஸ் நாடுகளின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
அதற்கு பதிலாக, "பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய செயல்பாடுகள், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி மற்றும் அவர்களுக்கு புகலிடம் கொடுப்பது உட்பட, அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்" என்று பிரிக்ஸ் தலைவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, "பயங்கரவாதிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதில் எந்தத் தயக்கமும் இருக்கக்கூடாது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாளர்களையும் சமமாக நடத்த முடியாது.
தனிப்பட்ட அல்லது அரசியல் ஆதாயத்திற்காக, பயங்கரவாதத்திற்கு சைலன்ட்டாக ஆதரவளிப்பது, பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாதத்தை ஆதரிப்பது எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்படாது" என்று பிரதமர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications