ராகினே மாகாண பயங்கரவாத வன்முறை- சூகியிடம் கவலை தெரிவித்த மோடி
ரோஹிங்யா முஸ்லிம்கள் வாழும் ராகினேவில் பயங்கரவாத வன்முறைகள் தொடர்பான மியான்மரின் கவலையை இந்தியா பகிர்ந்து கொள்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நேபிடா: மியான்மரின் ராகினே மாணத்தில் பாதுகாப்பு படையினருக்கு எதிரான பயங்கரவாதிகள் வன்முறை தொடர்பாக அந்நாட்டின் ஆலோசகர் சூகியிடம் இந்தியாவின் கவலையை பிரதமர் மோடி தெரிவித்தார்.
நேபிடாவில் பிரதமர் மோடியும்- சூகியும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:
ராகினே மாகாணத்தில் பயங்கரவாத வன்முறை, ராணுவத்துக்கு எதிரான வன்முறை மற்றும் அப்பாவி உயிர்கள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளன என்பதில் மியான்மர் நாட்டின் கவலையை இந்தியா பகிர்ந்து கொள்கிறது.

மியான்மரின் ஐக்கியம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க அனைத்துதரப்பும் ஒன்றாக இணைந்து வழியை கண்டறிய முடியும் என நாங்கள் நம்புகிறோம்.
அதே நேரத்தில் அனைவரும் அமைதி, நீதி, கண்ணியம் மற்றும் ஜனநாயக மாண்புகளையும் பெறவும் வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூகி, சில வாரங்களுக்கு முன்னர் மியான்மருக்கு விடுக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் எங்களுடன் இணைந்து உறுதியான நிலைப்பாட்டை எடுத்த இந்தியாவுக்கு நன்றி. இந்த மண்ணில் பயங்கரவாதம் வேரூன்ற அனுமதிக்காத வகையில் இருநாடுகளும் இணைந்து செயல்படும் என நம்பிக்கை கொள்கிறோம் என்றார்.
ராகினே மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம்கள் பெருமளவில் வசிக்கின்றனர். அவர்கள் வங்கதேச குடியேறிகள் என முத்திரை குத்துகிறது மியான்மர் நாடு. அண்மையில் ரோஹிங்யா முஸ்லிம்களின் அமைப்பு ஒன்று ராணுவம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக வங்கதேசத்திலும் இந்தியாவிலும் தஞ்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications