ரஷ்யாவில் தவிக்கும் இந்தியர்கள்.. ஆக்ஷனில் இறங்கிய மத்திய அரசு.. வெளியுறவுத்துறை பரபர விளக்கம்
மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியர்களை வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவம் பயன்படுத்துவதாக புகார் எழுந்து இருக்கும் நிலையில், இது தொடர்பாக இந்தியா தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் இந்தியர்களை மீட்கவும் உறுதி அளித்துள்ளது.
இந்தியாவிலிருந்து சுற்றுலா சென்றவர்களும், வேலைக்காக சென்றவர்களும் ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு உக்ரைனுக்கு எதிராக போரில் பயன்படுத்தப்பட்டு வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. குஜராத்தைச் சேர்ந்த ஹமில் மங்கூக்யா என்ற வாலிபர் ட்ரோன் தாக்குதலின் போது உயிரிழந்தார். இதையடுத்தே இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

இதன் தொடர்ச்சியாக முகமது ஹப்சன் என்ற ஐதராபாத்தை சேர்ந்த வாலிபரும் போரில் உயிரிழந்தர். அதுபோக, இந்தியர்கள் ஏழு பேர் ரஷ்ய ராணுவ உடையில் தாங்கள் வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறி சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவும் பரபரப்பை கிளப்பியது. ரஷ்யாவில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்ததை அடுத்து சிபிஐ இது தொடர்பாக விசாரணையை தொடங்கியது. இதில், நாடு முழுவதும் ஏழு நகரங்களில் நேற்று சோதனை நடத்தியது.
கடும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது: இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தி தொடர்பாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- போலி வாக்குறுதிகள் அளித்து வேலைக்கு ஆள் எடுத்து ரஷ்யாவுக்கு அனுப்பிய ஏஜெண்ட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. ஆள் கடத்தல் வழக்கு அவர்களுக்கு எதிராக பதியப்பட்டுள்ளது.
இந்தியர்களை உக்ரைனுக்கு எதிரான போரில் வலுக்கட்டாயமாக பயன்படுத்தும் விவகாரத்தில் ரஷ்யாவிடம், இந்திய அரசு தனது கவலையை தெரிவித்துள்ளது. ரஷ்ய ராணுவத்திற்கு உதவி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியர்களை விரைவாக விடுவிக்கப்படுவதை உறுதி செய்வதில் இந்திய அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது" என்றார்.
10 இடங்களில் சோதனை: முன்னதாக நேற்று வேலை வாய்ப்பு என்ற பெயரில் ரஷ்யா- உக்ரைன் பகுதிகளில் பணியாற்ற இந்தியர்களை அழைத்து சென்ற விசா கன்சல்டன்சி நிறுவனங்களுக்கு எதிராக சோதனை நடைபெற்றது. டெல்லி, திருவனந்தபுரம், மும்பை, அம்பாலா, சண்டிகர், மதுரை, சென்னை என 7 நகரங்களில் உள்ள 10 இடங்களில் சோதனையானது நடைபெற்றது.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?











Click it and Unblock the Notifications