For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போர் வந்தால் இந்தியா தோல்வி அடையும்.. எங்களை சீண்ட வேண்டாம்.. மீட்டிங்கிற்கு மறுநாளே சீனா ஆணவம்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவை சீண்டினால் இந்தியா தோல்வி அடையும், எல்லை பிரச்சனை போராக மாறினால் அதில் இந்திய வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்று சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.

Recommended Video

    1960லிருந்து லடாக்கின் Green Line-ஐ பிடிக்க முயற்சிக்கும் சீனா

    இந்தியா சீனா இடையே லடாக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது.லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பெங்கே இடையே ரஷ்யாவில் ஆலோசனை நடந்தது.

    இவர்கள் சமார் இரண்டு மணி நேரம் ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனை மிகவும் காரசாரமாக அமைந்து இருந்தது. எல்லை பிரச்சனைக்கு இந்தியாதான் காரணம் என்று சீனா இதில் குற்றஞ்சாட்டியது. சீனா எல்லையில் தேவையில்லாமல் அத்துமீறுவதாக இந்தியா புகார் வைத்துள்ளது.

    இதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.. தளர்வுக்கு பின்பும்.. சென்னையில் குறையும் கொரோனா.. என்ன நடக்கிறது?இதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.. தளர்வுக்கு பின்பும்.. சென்னையில் குறையும் கொரோனா.. என்ன நடக்கிறது?

    இந்தியா புகார்

    இந்தியா புகார்

    இந்த மீட்டிங்கை தொடர்ந்து சீன அரசின் கண்காணிப்பில் இயங்கி வரும், அரசுக்கு நெருக்கமான குளோபல் டைம்ஸ் இதழில் முக்கியமான கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. இந்த மீட்டிங் குறித்து அதில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்தியா சீனா இடையே போர் வந்தால் அதில் சீனாதான் வெற்றிபெறும். இந்தியா அதை எப்போதும் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.

    சீனா பலம்

    சீனா பலம்

    தேசிய அளவிலும், பொருளாதார அளவிலும், ராணுவ அளவிலும் இந்தியாவை விட சீனாதான் வலிமையான நாடு. இந்தியாவை விட சீனா பல மடங்கு சக்தி கொண்டது. இந்தியா சீனா இரண்டும் பெரியநாடாக்கள் தான். ஆனால் ராணுவம், மோதல் என்று வந்தால் சீனாதான் சிறப்பானது. இந்தியா கண்டிப்பாக சீனாவை சீண்டினால் தோல்வி அடையும்.

    இந்தியா வெற்றி

    இந்தியா வெற்றி

    எல்லை மோதல் போராக மாறினால் இந்தியாவிற்கு வெற்றிபெற வாய்ப்பே இல்லை. இரண்டு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்கள் இப்போது ஆலோசனை செய்துள்ளனர். இரண்டு நாட்டு உறவை இது மேம்படுத்தும் என்று நம்புகிறோம். எல்லையில் இதனால் பதற்றம் தணியும் என்று நம்புகிறோம். இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிய வேண்டும் .

    தேசிய வாத கொள்கை

    தேசிய வாத கொள்கை

    தேசியவாத கொள்கை காரணமாக இந்தியாவில் மக்கள் எல்லை பிரச்சனை மீது கவனம் செலுத்துகிறார்கள். இந்தியா தனது மக்களை கட்டுப்படுத்த வேண்டும். தங்கள் மக்களுக்கு தேவையானதை மட்டுமே கொடுக்க வேண்டும். அவர்களின் கவனத்தை முன்னேற்றத்தை நோக்கி திருப்ப வேண்டும். சீனா எல்லையில் அமைதியை மட்டுமே விரும்புகிறது. ஆனால் இந்தியா எல்லையில் அத்துமீற நினைக்கிறது, என்று அந்த கட்டுரை குறிப்பிட்டுள்ளது.

    English summary
    India will lose if war comes againts China says Golbal Times in an opinion piece.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X