ரஷ்யாவில் நடக்கும் 20 நாடுகளின் ராணுவ பயிற்சி.. இந்தியா திடீர் விலகல்.. பரபர முடிவு.. என்ன நடந்தது?
மாஸ்கோ: ரஷ்யா மூலம் நடத்தப்படும் பல நாட்டு போர் பயிற்சியில் இருந்து இந்தியா விலகி உள்ளது. கவ்காஸ் 2020 (Kavkaz-2020) என்ற பெயரில் நடத்தப்படும் போர் பயிற்சியில் இருந்து இந்தியா விலகி உள்ளது.
ரஷ்யாவில் நடக்க உள்ள கவ்காஸ் 2020 (Kavkaz-2020) நிகழ்ச்சி சர்வதேச அளவில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுக்கிறது. கவ்காஸ் 2020 என்பது கூட்டு ராணுவ பயிற்சி நிகழ்வாகும். கவ்காஸ் 2020 (Kavkaz-2020) பயிற்சி ரஷ்யாவின் தெற்கு பகுதியில் இருக்கும் அஸ்ட்ராகான் பகுதியில் செப்டம்பர் 15-27ம் தேதி வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 20 நாடுகள் கலந்து கொள்கிறது.
பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இந்த போர் பயிற்சியில் கலந்து கொள்கிறது. 12 நாட்கள் பயிற்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான் 4 நாட்கள் போர் பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கிறது.

ரஷ்யா சேரவில்லை
இதில் முதலில் இந்தியா கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் தற்போது இதில் இருந்து இந்தியா வெளியேறி இருக்கிறது. கொரோனா பாதிப்பு மற்றும் பயிற்சி எடுப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக விலகி உள்ளது. ரஷ்யாவுடன் பல சர்வதேச நிகழ்வுகளில் கலந்து கொண்டு இருக்கிறோம், ஆனால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறி இந்தியா வெளியேறி உள்ளது.

அறிவிப்பு வெளியிட்டது
இது தொடர்பாக முறையான அறிவிப்பை ரஷ்யாவின் வெளியுறவுத்துறையிடம் இந்தியா தெரிவித்துள்ளது. இதற்கு கொரோனாவை காரணமாக இந்தியா கூறியுள்ளது. பல நாட்டு வீரர்கள் அங்கே வருவார்கள். இதனால் இந்திய வீரர்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்று கூறி இந்த மறுப்பை இந்தியா தெரிவித்துள்ளது. இதற்கு மேலும் இரண்டு காரணங்கள் கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது காரணம்
அதன்படி இந்த கவ்காஸ் 2020 (Kavkaz-2020) பயிற்சி நடக்கும் தெற்கு ஓஸ்செட்டியா, அப்காசியா பகுதிகள் சர்ச்சைக்குரிய பகுதிகள் ஆகும். இந்த பகுதிகளை ரஷ்யாவிற்கு சொந்தமான பகுதியாக இந்தியா ஏற்கவில்லை. இந்த இடங்களை ஜார்ஜியாவின் கீழ் வரும் பகுதியாக இந்தியா கருதுகிறது. ஐநாவில் இருக்கும் பல்வேறு உறுப்பு நாடுகளும், ஐநாவும் இந்த இரண்டு பகுதிகளை ரஷ்யாவின் கீழ் வரும் பகுதிகளாக ஏற்கவில்லை.

சீனா பாகிஸ்தான்
இதனால் இந்தியா இங்கு நடக்கும் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பவில்லை. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது ஐநாவில் இருக்கும் பல உறுப்பு நாடுகளின் கோபத்தை சம்பாதிப்பது போல ஆகும். அதேபோல் மூன்றாவது காரணம் என்று பார்த்தால், இந்த கூட்டத்தில் சீனாவும், பாகிஸ்தானும் கலந்து கொள்கிறது. இரண்டும் ரஷ்யாவிற்கு மிகவும் நெருக்கமான நட்பு நடுக்குள்.

எல்லை பிரச்சனை
சீனா, பாகிஸ்தான் உடன் இந்தியா எல்லையில் மோதி வருகிறது. அதிலும் சீனாவுடன் கடுமையான மோதல் நிலவுகிறது. இப்படிப்பட்ட நிலையில் சீன வீரர்கள் உடன் இணைந்து இந்தியா ரஷ்யாவில் பயிற்சி மேற்கொள்ள முடியாது. இது இந்தியாவில் மக்கள் இடையே அதிருப்தியை உண்டாக்கும். இதனால் ரஷ்யாவிற்கு செல்லும் முடிவை இந்தியா கைவிட்டு உள்ளது. முன்னதாக 180 படை வீரர்களை இந்த நிகழ்விற்கு இந்தியா அனுப்ப திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications