இந்திய வம்சாவளி பெண் வழக்கறிஞருக்கு அமெரிக்காவில் அமைச்சர் பதவி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அரசு வழக்கறிஞராக பணிபுரிபவர், இந்திய வம்சாவளி பெண்ணான நந்திதா பெர்ரி. பெங்களூரில் உள்ள மவுண்ட் கார்மெல் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற நந்திதா, தன்னுடைய 21-வது வயதில் அமெரிக்கா சென்றார். அங்கு ஹூஸ்டனில் சட்டக் கல்வியில் தேர்ச்சி பெற்று வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
தற்போது நந்திதா, டெக்சாஸ் மாகாண அமைச்சராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த உத்தரவை அம்மாகாண ஆளுநர் ரிக் பராரா பிறப்பித்துள்ளார். அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நந்திதா, ஜனவரி 7-ம் தேதி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். அவருக்கு மாகாண தேர்தல் துறை, எல்லை, சர்வதேச உறவு விவகாரத்துறை ஆகிய பொறுப்பு ஒதுக்கப்படுகின்றன.
அமைச்சராக தன்னை நியமித்த ஆளுநர், ரிக் பராராவுக்கு நன்றி தெரிவித்த நந்திதா, ‘டெக்சாஸ் மாகாண வளர்ச்சிக்கு பாடுபடுவேன்' என்று உறுதியளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
