மும்பையில் யு.கே. பெண்ணைப் பார்த்து சுயஇன்பம் அனுபவித்த நபர்: மன்னிப்பு கேட்ட இந்திய குடிமகன்கள்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தபோது அவரை பார்த்துக் கொண்டே சுயஇன்பம் அனுபவித்த இந்தியரின் செயலுக்காக சக இந்திய ஆண்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் லூசி ஹெமிங்ஸ்(27). அவர் இந்தியாவில் 3 மாதம் சுற்றுலா மேற்கொண்டார். அப்போது அவர் நாட்டில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தார். மும்பைக்கு சென்ற அவர் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்துக் கொண்டிருத்திருக்கிறார். அப்போது ஒரு இந்தியர் அந்த பெண் அருகே வந்து தனது ஆணுறுப்பை ஆடையில் இருந்து வெளியே எடுத்து அவரை பார்த்தபடியே சுயஇன்பம் அனுபவித்துள்ளார்.

Indian men issue public apology after man publicly masturbates at British woman

இதை பார்த்த லூசி 3 நாட்களாக அதிர்ச்சியில் இருந்துள்ளார். தற்போது இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்றுள்ள லூசி தனது பிளாக்கில் இது குறித்து எழுதியுள்ளார். நான் மக்களுடன் பேச விரும்புபவள். ஆனால் இந்த சம்பவத்தை அடுத்து யாருடனும் பேச அச்சமாக இருந்தது. இது போன்று மீண்டும் நடக்குமா என்று யோசித்தேன். நடக்காது என்று தெரிந்தாலும் அந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி 3 நாட்கள் இருந்தது. நான் உடல் முழுவதையும் மறைக்கும்படி லூசாக தான் ஆடை அணிந்திருந்தேன் என்று அவர் தனது பிளாக்கில் தெரிவித்துள்ளார்.

லூசியின் பிளாக்கை படித்த இந்திய ஆண்கள், மும்பையில் நடந்த சம்பவத்திற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். நீங்கள் எங்கள் நாட்டுக்கு சென்ற இடத்தில் இவ்வாறு நடந்துள்ளதை நினைத்து வருந்துகிறேன். இனிமேல் நீங்கள் பாதுகாப்பான சூழலில் இருக்க பிரார்த்தனை செய்கிறேன் என ஒரு இந்தியர் லூசிக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

வெட்கப்படுகிறேன். மன்னித்துவிடுங்கள் என்று மும்பை சம்பவத்திற்காக ஒரு இந்தியர் மன்னிப்பு கேட்டு லூசியின் பிளாக்கில் எழுதியுள்ளார்.

குறிப்பு: லூசியின் பிளாக்கில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+