நியூசிலாந்தில் பெண்ணைப் பாராட்டிப் பேசியதற்காக தாக்கப்பட்ட இந்தியர் மரணம்
ஆக்லாந்து: நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில், ஒரு பெண் அணிந்திருந்த உடை நன்றாக இருக்கிறது என்று கூறியதற்காக, அப்பெண்ணின் காதலரால் சரமாரியாக தாக்கப்பட்ட இந்திய ஆசிரியர் மரணமடைந்துள்ளார்.
இதனால் நியூசிலாந்து வாழ் இந்தியர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
மிகவும் மோசமான முறையில் படுகாயமடைந்து அந்த இந்தியர் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அந்த இந்தியருக்கு வயது 27. அவரது பெயர் தருண் அஸ்தானா. பயிற்சி ஆசிரியராக இருந்து வந்தார். சம்பவத்தன்று மாலையில் ஹோட்டலுக்கு அவர் போயிருந்தார். அங்கு ஒரு பெண் தனது காதலருடன் வந்திருந்தார்.
அந்தப் பெண் அணிந்திருந்த உடை நன்றாக இருந்ததாக உணர்ந்த அஸ்தானா, அவரை நெருங்கிப் பாராட்டியுள்ளார். இதைப் பார்த்த அவரது காதலர் கிரான்வில்லி மெக்பேர்லான்ட், அஸ்தானாவை சரமாரியாக தாக்கினார். தலையில் அவர் பலமாக தாக்கியதால் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார் அஸ்தானா.
படுகாயமடைந்த நிலையி்ல் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அஸ்தானா தற்போது உயிரிழந்துள்ளார்.
மெக்பேர்லான்ட்டை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் மற்றும் உயிரிழப்பால் நியூசிலாந்து வாழ் இந்தியர்களிடையே பரபரப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications