Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரான் - இஸ்ரேல் மோதலில் பலியான முதல் இந்தியர்.. ஓமனில் எண்ணெய் கப்பலில் டிரோன் தாக்குதலில் உயிரிழந்த சோகம்

Oman, Iran, Iran latest news, Israel iran, First Indian casualty in US-Iran conflict, First Indian casualty, oman, Oman says mariner killed as oil tanker hit by bomb via drone boat, ஓமன், இந்தியர் பலி, அமெரிக்கா ஈரான் தாக்குதலால் இந்தியர் ப

Subscribe to Oneindia Tamil

மஸ்கட்: ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானும் பதில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இரு புறமும் மாறி மாறி தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஓமன் வளைகுடா கடல் பகுதியில் மார்ஷல் தீவு கொடியுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பல் மீது இன்று ஆளில்லா ட்ரோன் படகு தாக்குதல் நடத்தியதில், ஒரு மாலுமி உயிரிழந்ததாக ஓமன் அறிவித்து இருக்கிறது. ஆனால் இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

Indian Sailor Killed as Drone Boat Bomb Strikes Oil Tanker Amid US Iran Tensions

ஈரான் தலைவர் கமேனி கொலை

அணு ஆயுதத்தை தயாரிப்பதாக ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் குற்றம்சாட்டிவந்தன. அணு சக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதற்கிடையே ஈரான் மீது நேற்று முன்தினம் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து பெரிய அளவிலான வான் தாக்குதலில் ஈடுபட்டன. ஈரானின் புரட்சிகர காவல் படையின் தளங்கள், வான் பாதுகாப்பு நிலைகள் உள்ளிட்ட ராணுவத் தளங்களை குறிவைத்து அதிரடி தாக்குதல் மேற்கொண்டன.

தலைநகர் தெக்ரான் உள்பட 20-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் ஏவுகணைகள், போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவர் இறந்த தகவல் ஈரான் மற்றும் உலகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீவிரமாக தாக்கும் ஈரான்

அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 800 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பழி வாங்குவோம் என்று கூறிய ஈரான், இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான தாக்குதலை மேற்கொண்டது.

அதைத் தொடர்ந்து சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பக்ரைன், குவைத், ஜோர்டான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் அமெரிக்காவின் 27 ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலை ஈரான் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

இந்தியர் உயிரிழப்பு

இதனால் வளைகுடா நாடுகளில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து பீதி அடைந்துள்ளனர். 3-வது நாளாக இந்த தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவை சேர்ந்த ஒருவரும் இந்த மோதலில் பலியாகியிருக்கிறார். இதனை ஓமன் உறுதி செய்துள்ளது.

ஓமன் வளைகுடா கடல் பகுதியில் மார்ஷல் தீவு கொடியுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பல் மீது திங்கட்கிழமை ஆளில்லா ட்ரோன் படகு தாக்குதல் நடத்தியதில், ஒரு மாலுமி உயிரிழந்ததாக ஓமன் அறிவித்துள்ளது.

யார் தாக்குதல் நடத்தினர்?

எம்.கே.டி. வியோம் (MKD VYOM) என்ற அந்தக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஓமன் செய்தி நிறுவனம் கூறியது. உயிரிழந்த மாலுமி இந்தியாவைச் சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. மஸ்கட்டின் கடற்கரைக்கு அப்பால், ஓமன் வளைகுடாவில் இந்தத் தாக்குதல் நடந்து நடைபெற்றுள்ளது. தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+