For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலீசாரின் கண்மூடித்தன தாக்குதலில் இந்திய முதியவருக்கு முடக்குவாதம்! அமெரிக்காவில் பரபரப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய முதியவர் ஒருவரை போலீசார் தாக்கியதில் அவருக்கு முடக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்து.

Indian senior citizen paralysed after alleged police brutality in US

அமெரிக்காவின் அலாபாமா பகுதியில் வசிப்பவர் சிராக். இவரது தந்தை 57 வயதான சுரேஷ்பாய் பட்டேலும் மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில், தேவையில்லாமல் தங்கள் பகுதியில் சுரேஷ்பாய் நடமாடியதாக பக்கத்து வீட்டுக்காரர் உள்ளூர் போலீசிடம் புகார் அளித்தாராம்.

இதை விசாரிக்க வந்தபோது, போலீசார் கீழே பிடித்து தள்ளி தாக்கியதில் சுரேஷ்பாய் கடுமையாக காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவரை சோதனை நடத்திய டாக்டர்கள், சுரேஷ்பாய் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

போலீஸ் தரப்பில் கூறுகையில், "போலீஸ் விசாரணையின்போது சந்தேகப்படும் வகையில் பேண்ட் பாக்கெட்டுக்குள் சுரேஷ்பாய் கையை விட்டபடி நின்றார். எனவே கீழே தள்ள வேண்டியதாயிற்று" என்று கூறியுள்ளனர்.

ஆனால் சிராக் மற்றும் அவர் தரப்பு வக்கீல், போலீசார் பொய் சொல்வதாக கூறியுள்ளனர். காரணமேயின்றி சுரேஷ்பாய் அடித்து தள்ளப்பட்டார். அவரது முகத்தில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது என்று குற்றம்சாட்டினர்.

இந்தியர் மீதான தாக்குதல் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The police in Alabama has suspended an officer who pushed 57-year-old Sureshbhai Patel to the ground in an alleged attempt frisk him. Mr Patel is now in hospital and is temporarily paralyzed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X