சவுதியில் தத்தளித்த மேலும் 6 தமிழர்களை மீட்டு ஊருக்கு அனுப்பிய இந்தியன் சோஷியல் ஃபோரம்
ரியாத்: சவுதியில் சிக்கித் தவித்த மேலும் 6 தமிழர்களை இந்தியன் சோஷியல் ஃபோரம் மீட்டு தாயகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த அண்ணாமலை முருகேசன், செந்தில் கண்ணன், ஆறுமுகம் முருகேசன், சின்ன கருப்பசாமி, சுரேந்திரன் முத்துக்குமார், செந்தில் கண்ணப்பன், பெருமாள், ஜெயபாரதி ஆகியோர் சவுதி அரேபியா ரியாதில் உள்ள ஷிபா என்னுமிடத்தில் உள்ள ஒரு கம்பெனிக்கு வேலைக்கு வந்துள்ளார்கள்.
அந்த கம்பெனியில் சில மாதங்கள் மட்டுமே வேலை செய்துள்ளார்கள். பின்பு கம்பெனியில் வேலையில்லை எனக் கூறி அவர்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமல் விட்டுவிட்டார்கள்.

இந்த நிலையில் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் பல்வேறு உதவிகளை முகநூல் வழியாக அறிந்து அதன் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவி கேட்டார்கள்.
அவர்களை இந்தியன் சோஷியல் ஃபோரம், ரியாத்-தமிழ்நாடு மாநிலக் கமிட்டியின் துணைத் தலைவர் முஹம்மதலி பாபு, புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் அனீஸ் முஹம்மது மற்றும் துணை தலைவர் முஹம்மது முஸ்தபா ஆகியோர் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான அரிசி, காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து தற்காலிகமாக ஒரு கட்டிடத்தில் தங்க வைத்து அவர்கள் நாடு திரும்பும் அனைத்து முற்சிகளையும் செய்து வந்தனர்.
இறைவன் உதவியால் இந்தியன் சோஷியல் ஃபோரம், ரியாத் -தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் துணைத்தலைவர் முகம்மதலி பாபு, செயலாளர் சர்தார் என்கிற சாகுல் ஹமீது ஆகியோரின் துரிதமான நடவடிக்கைகளால் சவுதி அரசின் சட்டங்களுக்கேற்ப விரைந்து செயல்பட்டு அவர்கள் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டு விட்டார்கள்.
முன்னதாக சவுதியில் முறைப்படியான விசா இல்லாமல் 18 மாதங்களாக தனது இகாமாவை புதுப்பிக்க முயற்சி செய்தும் முடியாமல் தவித்த புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆரோக்ய சாமி பீட்டரை இந்தியன் சோஷியல் ஃபோரம் ஊருக்கு அனுப்பி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் மனித நேய பணிகள் தொய்வில்லாமல் தொடர்வதற்கு பெரிதும் உதவி வரும் ஊடகங்களுக்கும் இணையதள ஆசிரியர்களுக்கும் இந்தியன் சோஷியல் ஃபோரம் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications