Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலவில் ஒரு இரவு கூட தாக்குப்பிடிக்காது.. சந்திரயான்-3 ரோவரை கேலி செய்த சீனா! இந்தியாவிடம் சீண்டல்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நிலவில் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில் பிரக்யான் ரோவரும் அதில் இருந்து வெளியே வந்து ஆய்வை தொடங்கி உள்ளது. உலக நாடுகள் இந்தியாவை பாராட்டி வரும் நிலையில் சீனா கேலி செய்து சீண்டியுள்ளது.

இந்தியா தொடர்ந்து விண்வெளி துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் ரஷ்யா, அமெரிக்கா நாடுகளை நம்பி இருந்த நம் நாடு இப்போது சொந்தமாக ராக்கெட், விண்கலத்தை தயாரித்து அதன் மூலம் விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வெற்றியும் கண்டு வருகிறது.

Indias Pragyan cannot withstand the lunar nights, Says China global times

இதனால் தான் பல நாடுகளும் தற்போது இந்தியாவிடம் செயற்கோள் ஏவ உதவி கேட்கின்றனர். அதோடு விண்வெளி திட்டங்களை சேர்ந்து செயல்படுத்துவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட ஆர்வமாக உள்ளன. இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் தான் சந்திரயான் 3 விண்வெளி திட்டம் அமைந்துள்ளது.

அதாவது நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ சார்பில் கடந்த மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 23ம் தேதி விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் ‛சாப்ட் லேண்டிங்' முறையில் தரையிறங்கியது. இதன்மூலம் நிலவின்தென்துருவத்தில் கால்பதித்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா 4வது இடம் பிடித்துள்ளது. அதோடு நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

இதுமட்டுமின்றி திட்டமிட்டபடி விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவரும் வெளியே வந்து நிலவில் ஆய்வு செய்துள்ளது. விக்ரம் லேண்டர் மற்றும் ரோவரில் உள்ள கருவிகள் பிரச்சனைகள் ஏதுமின்றி சூப்பராக செயல்பட்டு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் நிலவு ஆய்வு குறித்த படங்களை இஸ்ரோவுக்கு அனுப்பி வருகிறது. விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை 14 நாட்கள் நிலவின் தென்துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இதனால் நிலவு குறித்த கூடுதல் விபரங்களை இஸ்ரோ பெற உள்ளது.

இந்தியாவின் இத்தகைய மகத்தான சாதனையை ரஷ்யா, பாகிஸ்தான் உள்பட பல நாடுகள் பாராட்டியுள்ளன. இத்தகைய சூழலில் தான் அண்டை நாடான சீனா நம்மை சீண்டியுள்ளது. அதாவது சந்திரயான் - 3 திட்டத்தை கேலி செய்துள்ளது. அதாவது சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊதுகுழலாக கருதப்படும் ‛க்ளோபல் டைம்ஸ்' பத்திரிகை இந்தியாவின் சந்திரயான் திட்டத்தை சீனாவுடன் ஒப்பிட்டு கிண்டல் செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தியில் கூறபப்ட்டுள்ளதாவது:

பல துறைகளில் இந்தியாவை விட சீனா முன்னணியில் உள்ளது. 2010ல் சாங்இ-2 திட்டம் மூலம் சீனா ஆர்பிட்டர் மற்றும் லேண்டரை நேரடியாக பூமி-நிலவின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது. ஆனால் ராக்கெட்டுகளின் குறைந்த செயல்திறன் காரணமாக இந்தியாவால் இது முடியாத சூழல் உள்ளது. அதேவேளையில் சீனாவின் மேம்பட்ட தொழில்நுட்பம் நேரத்தையும் எரிபொருளையும் மிச்சப்படுத்துகிறது. மேலும் சீனா தொழில்நுட்ப உந்துவிசை என்பது 1,500 முதல் 7,500 நியூட்டன்களாக உள்ளன.

அதோடு சீனா பயன்படுத்தும் எரிபொருள் மிகவும் மேம்பட்டது. சீனாவின் ரோவர் 140 கிலோ எடை கொண்டது. இந்தியாவின் ரோவர் பிரக்யான் 26 கிலோ எடை மட்டுமே. இந்தியாவின் பிரக்யான் ரோவர் நிலவில் ஒரு நாள் (நிலவில் ஒருநாள் என்பது 14 பூமி நாட்களாகும்) மட்டுமே நீடிக்கும். நிலவில்இரவு வந்தால் ரோவரால் தாக்குப்பிடிக்க முடியாது.

ஆனால் சீனாவின் யுடு-2 ரோவர் நிலவில் நீண்டகாலம் பணிபுரிந்து சாதனை படைத்துள்ளது. இது நியூக்ளியர் பவருடன் செயல்பட்டது'' என இந்தியாவை சீண்டியுள்ளது. அதேவேளையில், ‛‛விண்வெளி துறையில் சீனாவுடன் சேர்ந்து செயல்பட பிற நாடுகள் விரும்பினால் அதற்கான கதவு என்பது திறந்தே உள்ளது. இந்தியாவின் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றுவதில் சீனா ஆர்வமாக உள்ளது'' எனவும் தெரிவித்துள்ளது.

உண்மையை கூற வேண்டும் என்றால் சீனா நிலவின் தென்துருவம் என்பது சூரியஒளி அதிகம் படாத பகுதியாகும். மேலும் கரடு, முரடான பள்ளங்கள் நிறைந்து காணப்படுகிறது. நிலவின் தென்துருவத்தின் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் சூரியஒளி படும். அதோடு 14 நாட்கள் இரவாகவும், 14 நாட்கள் பகலாகவும் இருக்கும். இரவில் குளிர் என்பது -230 டிகிரி செல்சியஸ் வரை செல்லும். இதுபோன்ற இடங்களில் விண்வெளி ஆய்வு கலன்களை தரையிறக்கி ஆய்வு செய்வது மிகவும் சவாலானது. இதனால் தான் ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஒதுங்கி நிற்கின்றன.

ஆனால் இந்தியா அப்படியில்லை. நிலவின் தென்துருவத்தில் சூரியஒளி படும் இடத்தை கண்டுபிடித்து அங்கு லேண்டரை தரையிறக்கி ரோவர் உதவியுடன் ஆய்வை தொடங்கி உள்ளது. நிலவில் ஆய்வு செய்யும் லேண்டர், ரோவர் உள்ளிட்டவைகளில் சோலார் பேனல்கள் உள்ளன. இதன்மூலம் சூரியஒளி உதவியுடன் லேண்டர், ரோவர் உள்ளிட்டவை ஆய்வுக்கு தேவையான ஆற்றலை பெற்றுக்கொள்ளும். 14 நாட்களுக்கு பிறகு நிலவின் தென்துருவத்தில் சூரியஒளி படாது என்பதால் இந்த கருவிகள் செயல் இழக்க வாய்ப்புள்ளது. இதனை அறிந்தே இஸ்ரோ திட்டமிட்டு 14 நாள் ஆய்வு என அறிவித்துள்ளது. இதற்கிடையே தான் சீனா மேற்கூறியபடி சந்திரயான்-3 திட்டத்தை சீண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+