282 பேரை பலி வாங்கிய இந்தோனேசிய சுனாமி.. கடலில் விழுந்த கல்.. பேரழிவிற்கு இதுதான் காரணமா!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமிக்கு என்ன காரணம் என்று தற்போது விவரம் வெளியாகி உள்ளது.
Recommended Video

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமிக்கு என்ன காரணம் என்று தற்போது விவரம் வெளியாகி உள்ளது.
இந்தோனேசிய சுனாமி இந்த வருடத்தில் உலகத்தில் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாக மாறியுள்ளது. திடீர் என்று ஏற்பட்ட சுனாமி யாரும் நினைத்து பார்க்காத விளைவுகளை உருவாக்கி இருக்கிறது.
நேற்று அதிகாலை இந்தோனேசியாவில் சுனாமி ஏற்பட்டது. இன்னும் அங்கு பல இடங்களில் கடல் நீர் வெளியே செல்லாமல் உள்ளது.

பலி எண்ணிக்கை
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் 282 பேர் பலியாகி உள்ளனர். இந்த சுனாமியில் 1000 பேர் காயமடைந்துள்ளனர். 800 பேர் காணாமல் போய் இருக்கிறார்கள். அங்கு மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

எரிமலை வெடிப்பு
நேற்று இரவில் வெடித்த கரகட்டாவ் எரிமலையால் தற்போது அங்கு சுனாமி ஏற்பட்டுள்ளது. சைல்ட் எரிமலை என்று இந்த கரகட்டாவ் எரிமலை அழைக்கப்படுகிறது. இது இந்த வருடம் முழுக்க அடிக்கடி வெடித்து வந்தது. சுனாமிக்கு முக்கிய காரணம் இதுதான்.

மாறியது
இது வெடித்த காரணத்தால்தான் இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் நில அடுக்கு தடம் மாறியது என்று கூறினார்கள். இதனால் ஏற்பட்ட அழுத்த மாறுபாடு காரணமாக சுனாமி ஏற்பட்டது என்று கூறினார்கள். இந்த எரிமலை வெடித்து சில நிமிடங்களில் சுனாமி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் உண்மை காரணம்
ஆனால் தற்போது சுனாமிக்கு உண்மை காரணம் என்ன என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கரகட்டாவ் எரிமலையின் பெரும் பகுதி கடலில் விழுந்த காரணத்தால்தான் சுனாமி ஏற்பட்டுள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். கரகட்டாவ் எரிமலையின் ஒரு பகுதி கடலில் விழுந்து உள்ளது.

பதிவானது
இது யுரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சி சென்டினல் என்ற சாட்டிலைட் மூலம் (European Space Agency's Sentinel-1) கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஆதாரங்கள் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று கூறியுள்ளனர். இதன் காரணமாகத்தான் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட முடியவில்லை என்றும் கூறி இருக்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications