For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிரம்ப் பேச்சால் கடுப்பான ஈரான்.. அமெரிக்க தூதரகம் அருகே மீண்டும் ஏவுகணை தாக்குதல்.. பகீர்!

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஈரான் - அமெரிக்கா என்ன தான் பிரச்னை... இவர்களில் யார் பலசாலி ?

    டெஹ்ரான்: ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தி உள்ளது. நேற்று தாக்குதல் நடத்திய நிலையில் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது.

    தற்போது மூன்றாம் உலகப் போருக்கான வாய்ப்புகள் பிரகாசமாகி வருகிறது. ஈரான் - அமெரிக்கா இடையில் நடக்கும் சண்டை மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் என்கிறார்கள்.

    கடந்த வாரம் அமெரிக்க டிரோன் தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.

    என்ன எச்சரிக்கை

    என்ன எச்சரிக்கை

    இந்த தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தார். ஈரானின் ராணுவ தளபதி சுலைமானி முன்னரே கொல்லப்பட்டிருக்க வேண்டிய நபர். ஈரான் தொடர்ந்து தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. போர் தொடுப்பதை அமெரிக்கா விரும்பவில்லை.

    தடை

    தடை

    தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் இனி தீவிரமடையும்., ஈரான் மீதான பொருளாதார தடைகள் தொடரும், என்று குறிப்பிட்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த பேச்சு ஈரானை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

    மீண்டும் ஈராக்

    மீண்டும் ஈராக்

    இதனால் இன்று மீண்டும் ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தி உள்ளது. மொத்தம் 2 ராக்கெட்டுகளை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. கட்யுஷா எனப்படும் ரஷ்யாவின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ராக்கெட் ஆகும் இது.

    ஈரான் எப்படி

    ஈரான் எப்படி

    ஈரான் நேற்று தாக்குதல் நடத்திய நிலையில் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த பகுதி தாக்குதல் நடத்த கூட பாதுகாக்கப்பட்ட கிரீன் ஃசோன் பகுதியாகும். ஆனால் இந்த தாக்குதலில் யாரும் பலியாகவில்லை என்று அமெரிக்க அரசு கூறியுள்ளது.

    English summary
    Iran attacks again in near USA embassy in Iraq with a missile.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X