ஈரான் நினைத்தால்.. சில நாட்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கலாம்.. அஞ்சும் அமெரிக்கா.. என்ன நடக்குது?
டெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தி உள்ள நிலையில் ஈரான் நினைத்தால் அணு ஆயுதங்களை வேகமாக தயாரிக்க முடியும் என உலக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் விமான நிலையங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.

இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் இன்னும் மோசமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேலை ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்கியது. இரண்டு நாட்டு மோதல் பெரிய போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இன்று ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வெளியான அப்டேட்கள்: மத்திய ஈரானில் உள்ள இஸ்பஹான் மாகாணத்தில் வரிசையாக ஏவுகணை தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. ஈராக் மற்றும் தெற்கு சிரியாவில் ஒரே நேரத்தில் வரிசையாக ஏவுகணை தாக்குதல்கள் நடந்துள்ளன. ஈரானுக்குள் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார்.
ஈரானிய அரசுடன் தொடர்புடைய ஊடகங்கள் இஸ்பஹானில் வெடித்ததை உறுதிப்படுத்துகின்றன ஈரானிய வான்வெளியின் முக்கிய பகுதிகள் மூடப்பட்டு உள்ளன. அமெரிக்காவின் ஆலோசனையை மீறி ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தி உள்ளது.
அணு உலை: அது மட்டுமின்றி ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு பதிலடியாக ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.. விரைவில் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு உள்ளது
அந்நாட்டு அதிபர் - பிரதமர் - ராணுவ தளபதி உள்ளிட்டோருக்கான உயர்மட்ட கூட்டத்தில் பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஈரானுக்கு பயங்கர பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இது என்ன பதிலடி என்று தெரியவில்லை. இந்த பதிலடி மோசமாக இருக்கும் பட்சத்தில் அது மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமோ என்ற கேள்விகளை எழுப்பி உள்ளது.
ஈரான் அணு ஆயுதம்: இந்த தாக்குதலுக்கு இடையில்தான் தங்களின் அணு ஆயுத கொள்கையை ,மறுபரிசீலனை செய்ய போவதாக ஈரான் தெரிவித்துள்ளது. அணு ஆயுதம் இல்லை என்ற கொள்கையை அந்த நாடு மறுபரிசீலனை செய்யும் என்று அறிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுடன் ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை செய்துள்ளது. 2015ல் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் 2018ல் டிரம்ப் ஆட்சியில் நீக்கப்பட்டது.
ஈரான் அமெரிக்கா சொல்வதை கேட்கவில்லை மற்ற ஆயுத சோதனைகளை செய்கிறது என்று கூறி ஒப்பந்தத்தை நீக்கியது. இதன் காரணமாக ஈரானுக்கு தற்போது அணு ஆயுதம் செய்ய வாய்ப்புகள் உள்ளன. இந்த ஒப்பந்தம் முடிந்த நிலையில் தற்போது ஈரானிடம் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது. முன்பு 200 கிலோ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இருந்த ஒப்பந்தம் நீக்கப்பட்ட நிலையில் அணு ஆயுதம் செய்ய தயாரான தரத்தில் இருக்கும் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது.
ஈரான் இப்போது யுரேனியத்தை 60 சதவிகிதம் தூய்மைக்கு செறிவூட்டுகிறது, மேலும் செறிவூட்டப்பட்டால், அது அணு ஆயுதம் தயாரிக்க ஏதுவாகும். விரைவில் இதனால் ஈரான் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் முடியும். அவசரமாக தேவைப்பட்டால் உடனே அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கவும் முடியும்.
உலகப்போர் மூளும் அபாயம்: கடந்த சில மாதங்களாக உக்ரைன் - ரஷ்யா, இஸ்ரேல் - பாலஸ்தீன போர் போர் எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது. இவை முழுமுதற் போராக மாறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஒரு முழுமையான உலகப் போரின் முதன்மையான ஆபத்து பற்றி கேட்டால் அமெரிக்காவும் ரஷ்யாவும் சீனாவும் நேரடி மோதலில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த இரண்டு இரண்டு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டால் கண்டிப்பாக இது உலகப்போராக மாறும். ஆனால் இப்போதைக்கு சீனா இதில் நேரடியாக மூக்கை நுழைக்கவில்லை.
ஆனால் அது நடக்கும் பட்சத்தில் கண்டிப்பாக போர் கையை மீறி போகும் வாய்ப்புகள் உள்ளன.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications