3 மொசாட் உளவாளிகளை தூக்கிலிட்ட ஈரான்.. போர் முடிந்த மறுநாளே பாய்ந்த ஆக்ஷன்! உற்று கவனிக்கும் இஸ்ரேல்
தெஹ்ரான்: இஸ்ரேல் ஈரான் இடையே எப்போதும் மோதல் இருந்தே வந்துள்ளது. ஈரான் நாட்டில் அரசிலேயே கூட பல்வேறு நிலைகளில் இஸ்ரேலின் மொசாட் உளவாளிகள் ஊடுருவி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே சமீபத்தில் நடந்த மோதலில் முதல் நாளே ஈரானின் டாப் தலைவர்களை இஸ்ரேலால் துல்லியமாகக் கொல்ல முடிந்தது. இதற்கிடையே இஸ்ரேல் உளவாளிகள் எனச் சொல்லி 3 பேரை ஈரான் அரசு தூக்கிலிட்டுள்ளது.
இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக மோதல் தொடர்ந்து வந்தது. ஒரு வழியாக நேற்று தான் இரு நாட்டு மோதல் முடிவுக்கு வந்தது. இரு நாடுகளுமே போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டன. இதனால் மெல்ல அமைதி திரும்பும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பல மணி நேரமாக எந்தவொரு தாக்குதலும் இல்லாமலேயே இருக்கிறது.

மூன்று பேருக்குத் தூக்கு
இதற்கிடையே ஈரான் நாட்டில் இப்போது மூன்று பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் மொசாட் அமைப்பிற்காக உளவு பார்த்ததாக சொல்லி 3 பேரை ஈரான் அரசு தூக்கிலிட்டுள்ளது. இந்த தகவலை ஈரான் நாட்டின் மிஸான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கடந்த 12 நாட்களாக இஸ்ரேல் ஈரான் இடையே மோதல் தொடர்ந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்டதைத் தொடர்ந்து இந்த மோதல் ஒரு வழியாக நேற்றுதான் முடிவுக்கு வந்தது. போர் முடிவுக்கு வந்த மறுநாளே ஈரான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தூக்கிலிடப்பட்ட மூவரும் இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்புடன் இணைந்து பணியாற்றியதாகவும் மிஸான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்ன காரணம்!
ஈரான் நாட்டின் முக்கிய புள்ளி ஒருவரைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட உபகரணங்களைக் கடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் யார் அந்த முக்கிய புள்ளி.. அவர் எப்போது கொல்லப்பட்டார் உள்ளிட்ட விவரங்களை வெளியிடவில்லை. இது தவிர இஸ்ரேலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி சுமார் 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசுக்குச் சொந்தமான நூர்நியூஸ் தெரிவித்துள்ளது.
பின்னணி
இஸ்ரேல் ஈரான் இடையே பல காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஈரான் அரசில் பல நிலைகளில் இஸ்ரேலின் மொசாட் அமைப்பு ஊடுருவி விட்டதாகச் சொல்லப்படுகிறது. இனால் கடந்த சில காலமாகவே மொசாட் உடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பலரை ஈரான் அரசு தூக்கிலிட்டுள்ளது. மேலும், ஈரானில் இஸ்ரேல் உளவாளிகள் எளிதாக தங்கள் திட்டத்தை மேற்கொள்ள உதவியதாகவும் பலரை ஈரான் கைது செய்துள்ளது.
ஒரு வாரத்திற்கு மேலாக இஸ்ரேல் ஈரான் போர் தொடர்ந்த நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா களமிறங்கியது. ஈரான் நாட்டில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கா பங்கர் பஸ்டர் பாம்களை வீசியது. இதனால் மோதல் தீவிரமடைந்தது. பதிலுக்கு கத்தாரில் உள்ள அமெரிக்கத் தளம் மீது ஈரானும் தாக்குதல் நடத்த முயன்றது.
டிரம்ப் ஆவேசம்
இது பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருந்தது. இந்தச் சூழலில் திடீரென நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை போர் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாகவும் டிரம்ப் அறிவித்தார். இருப்பினும், டிரம்ப் அறிவிப்பு வந்த கொஞ்ச நேரத்திலேயே தாக்குதல்கள் மீண்டும் நடந்தன. ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த மீறல்கள் குறித்து பரஸ்பரம் குற்றம் சாட்டினர். இது அதிபர் டிரம்பை கோபப்படுத்தியது. அதைத் தொடர்ந்து நேரடியாக இஸ்ரேலை எச்சரித்து டிரம்ப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications