ஈரானில் வெடித்த மாணவர் போராட்டம்! காமேனி ஆட்சிக்கு முடிவு? டிரம்பின் பலே திட்டம்!
தெஹ்ரான்: ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்திருக்கிறது. இது மோதலாக, போராக எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்கிற அச்சம் நிலவி இப்படி இருக்கையில், ஈரானில் மாணவர் போராட்டமும் வெடித்திருக்கிறது. இந்த போராட்டம் கமேனியின் ஆட்சியை முடிவுகட்டும் என அமெரிக்க ஆதரவாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
ஈரானின் பல பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் காமேனி ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். ஷெரீஃப் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும் அரசுக்கு எதிரான கோஷங்கள் கிளம்பின. மாணவர்கள் காமேனிக்கு மரணம் என்று முழங்கியுள்ளனர்.

முடியாட்சி மீண்டும் வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு எதிராக அரசு ஆதரவாளர்களும் எதிர் போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர். இந்த போராட்டங்களால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது.
இதற்கு முன்னர் நடந்த அரசுக்கு எதிரான போராட்டங்களில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்த மாணவர்கள், காமேனிக்கு எதிராகக் கோஷமிட்டனர். ஈரானில் பொருளாதாரம் சீரழிந்ததைக் கண்டித்து, கடந்த டிசம்பரில் வர்த்தகர்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தினர். அப்போது முதல் இந்த போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. ஆனால், காமேனி தலைமையிலான அரசு இவற்றை வன்முறையாக அடக்கியது.
இந்த போராட்டங்களை எங்கள் அரசுக்கு எதிரான சக்திகள்தான் தூண்டி விடுகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் தூண்டுதல் இதில் இருக்கிறது என்றும் ஈரான் அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்த போராட்டங்களை ஈரான் அரசு கடுமையாக ஒடுக்கியதில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் கொல்லப்பட்டனர். மொத்தம் 3000 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அரசு கூறியிருக்கிறது. ஆனால், தன்னார்வ அமைப்புகள் இந்த பலி எண்ணிக்கை 7000 ஆக இருக்கும் என தெரிவித்திருக்கிறது.
இந்த போராட்டங்கள் நடந்த காலகட்டம் மிகவும் முக்கியமானது. அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் முட்டல் மோதல்கள் அதிகரித்திருக்கும் நேரத்தில் இந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது பெர்சியன் கடல் பகுதியில், ஈரானுக்கு பக்கத்தில் அமெரிக்கா தனது போர் கப்பல்களை நிலை நிறுத்தியுள்ளது. அணு சக்தி ஒப்பந்தத்தில் சிறிய தவறு நடந்தாலும், ஈரான் மீது தாக்குதல் தொடரும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று இது குறித்து பேசிய டிரம்ப், "எங்கள் ராணுவம் முன்னெப்போதையும் விட சக்தி வாய்ந்தது" என்று கூறினார். ஒப்பந்தம் செய்வதற்கு 15 நாட்கள் அவகாசம் உள்ளதாகவும், இல்லையெனில் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் ஈரானை எச்சரித்தார். யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன், யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் போன்ற விமானம் தாங்கி கப்பல்கள், டஜன் கணக்கான போர் விமானங்கள் தற்போது ஈரானை சுற்றி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications