மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.. தனது வான் எல்லையை மூடியது ஈரான்! உக்ரைனுக்கு வார்னிங்
தெஹ்ரான்: இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீதும் தாக்குதலை நடத்தும்போது ஈரான் தனது வான் எல்லையை மூடியிருந்தது. இதனை தொடர்ந்து, நேற்றிரவு மீண்டும் தனது வான் எல்லையை மூடியிருக்கிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து ஈரானின் போக்குவரத்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜித் அகவன் கூறுகையில், "சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் ஒருங்கிணைப்புக் குழு எடுத்த முடிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரானின் மத்திய மற்றும் மேற்கு பகுதியின் வான் பரப்பை நாங்கள் மூடியிருக்கிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த பகுதியில் சர்வதேச விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கிழக்கு பகுதியை பயணிகள் விமானங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். தெற்கு, வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் மெஹ்ராபாத் மற்றும் இமாம் கொமேனி என மூன்று விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவை இன்று, அதாவது ஜூலை 3ம் தேதி மதியம் 2 மணி வரை மூடப்பட்டிருக்கும்" என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் உடனான போர் ஜூன் 25ம் தேதி முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் 4 நாட்களுக்கு பிறகு ஈரான் தனது மத்திய மற்றும் மேற்கு வான்வெளியை பயணிகள் விமானத்திற்கு திறந்து விட்டிருந்தது. ஹஜ் புனித யாத்திரை முடிந்து சவுதி அரேபியாவிலிருந்து திரும்பும் ஆயிரக்கணக்கான ஈரான் யாத்ரீகர்களுக்காக விமான நிலையம் திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென மீண்டும் வான் பரப்பை ஈரான் மூடியிருப்பது மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏன் வான் வான்வழியை ஈரான் மூடியது என்பது குறித்து உறுதியான காரணங்கள் ஏதும் தெரியவில்லை. பாதுகாப்பு காரணம் எனில், என்ன பாதுகாப்பு காரணம்? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
ஈரானின் அணு ஆய்வு மையங்கள் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சில நாட்களுக்கு முன்னர் தாக்குதலை நடத்தியிருந்தது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் உதவியிதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. இந்த உதவி தொடரக்கூடாது. ஒருவேளை தொடர்ந்தால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. அதாவது இஸ்ரேலுக்கு உதவும் நாடுகளும் இந்த போரில் எங்களுக்கு எதிரிதான் என்று ஈரான் ஏற்கெனவே கூறியிருக்கிறது. அந்த வகையில் உக்ரைன் உஷாராக இருக்க வேண்டிய நேரம் இது என்று ஈரான் எச்சரித்துள்ளது.
மறுபுறம் அமெரிக்கா மீண்டும் எங்கள் மீது தாக்குதலை தொடங்கினால், 'ஹார்முஸ் நீரிணை' முழுவதும் கன்னி வெடிகளை மிதக்க விடுவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இதனை ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகம் உறுதி செய்திருக்கிறது. அமெரிக்கா இந்த போரில் தீவிரமாக நுழைந்தால், நீரிணையை முழுமையாக மூடிவிடுவோம் என்று ஈரான் தொடர்ந்து எச்சரித்து வந்தது. இது மட்டும் நடந்தால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications