பாதாள அறையில் பயங்கர ஆயுதங்கள்.. வீடியோ வெளியிட்டு அமெரிக்காவை மிரட்டும் ஈரான்
தெஹ்ரான்: இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஈரானும் பதில் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. இதனால் போர் உக்கிரமடைந்துள்ளது. இந்த நிலையில் ஈரான் தனது பாதாள அறையில் டிரோன்கள், ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை அடுக்கி வைத்துள்ள வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக இந்த வீடியோவை ஈரான் வெளியிட்டு இருக்கலாம் என்று தெரிகிறது
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். கமேனி மட்டுமின்றி அவரது மகள், மருமகன், மனைவி உள்ளிட்டோரும் பலியாகியுள்ளனர். இந்த தகவலை ஈரானிய அரசு ஊடகம் உறுத் செய்துள்ளது.

உக்கிரம் அடையும் மோதல்
கமேனி கொல்லப்பட்டதால் கொந்தளித்த ஈரான், அமெரிக்காவையும் அதன் நேச நாடுகளையும் பழி தீர்க்காமல் விட மாட்டோம் என்று கூறி பதிலடி தாக்குதலை தொடுத்து வருகிறது. வளைகுடா நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணைகளை விசி தாக்குதல் நடத்தி வருகிறது.
துபாய் உள்ளிட்ட பகுதிகளிலும் வானில் வெடிச்சத்தம் தொடர்ச்சியாக கேட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். ஈரான் அமெரிக்கா மோதல் உக்கிரம் அடைந்து வரும் நிலையில் தற்போது பாலிஸ்டிக் ஏவுகணையையும் ஈரான் பயன்படுத்த தொடங்கியுள்ளது.
பாதாள அறையில் ஆயுதங்கள் - வீடியோ
இதற்கிடையே ஈரான் தனது பாதாள அறையில் அடுக்கி வைத்துள்ள வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளது. ஈரான் அரசுக்கு சொந்தமான ஊடகங்களில் இந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த பாதாள அறையில், டிரோன்கள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தங்களிடம் உள்ள ஆயுதங்களை காட்டி அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக இந்த வீடியோவை ஈரான் வெளியிட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. ஈரான் மீது தாக்குதல் தீவிரம் அடைந்து இருக்கும் நிலையில், அந்த நாட்டில் இதுவரை, 555 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு பிறகு டிரம்ப் பேச்சு
இதுவரை 131 நகரங்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று கூறுகையில், "அவர்களை கடுமையாக தாக்கிக் கொண்டிருக்கிறோம். இது மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது மிகுந்த சக்திவாய்ந்தது.
உலகிலேயே மிகச் சிறந்த இராணுவம் எங்களிடம் உள்ளது, அதையே நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில் இன்னும் தீவிரமான பதிலடி இன்னும் வர இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
சில நிமிடங்களில் தகர்த்துவிட்டோம்
டிரம்ப் மேலும் கூறுகையில், "ஈரானில் நூற்றுக்கணக்கான இலக்குகளை நாம் தாக்கியுள்ளோம். ஈரானிய படைகளின் அமைப்புகள் மற்றும் ஈரான் வான் பாதுகாப்பு அமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 9 கப்பல்கள் மற்றும் அவர்களின் கடற்படை கட்டமைப்புகளை சில நிமிடங்களில் தகர்த்துவிட்டோம்" என்றார்.
ஈரானின் ஆயுத வலிமை
அமெரிக்கா மற்றும் ஈரானின் ஆயுத வலிமையை ஒப்பிட்டால் எட்டாத உயரத்தில் அமெரிக்கா உள்ளது. ஆனாலும் ஈரானும் வலிமையான ஆயுதங்களை வைத்து இருப்பதால் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிகாவிடம் 13 ஆயிரம் ராணுவ போர் விமானங்கள் உள்ள நிலையில், ஈரானில் 560 விமானங்களே உள்ளன. இவையும் பழமையான நவீன தொழில் நுட்பம் அற்றவை.












Click it and Unblock the Notifications