ஏன் தொட்டோம்னு அமெரிக்காவே நினைக்கும் அளவுக்கு தாக்குவோம்.! வெளிப்படையாக எச்சரித்த ஈரான்
தெஹ்ரான்: இந்தியப் பெருங்கடலில் ஈரானுக்குச் சொந்தமான கப்பலை அமெரிக்கா தாக்கி அழித்துள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைக் கடலில் ஏற்பட்ட பேரழிவு எனச் சாடியுள்ள ஈரான், இதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்றும் அமெரிக்கா வருத்தப்படும் அளவுக்குப் பதிலடி இருக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் 6வது நாளாகத் தொடர்கிறது. இதற்கிடையே இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் வியாழக்கிழமை காலை தாக்குதல்களை நடத்தியது. இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததற்குப் பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா
அமெரிக்கா கடும் வருத்தம் தெரிவிக்கும் அளவுக்குத் தாக்குதல்களை நடத்துவோம் என்றும் ஈரான் அச்சுறுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு இந்தியப் பெருங்கடலில், ஈரானின் 'டேனா' போர்க்கப்பலை அமெரிக்கக் கடற்படை மூழ்கடித்தது. இதில் குறைந்தது 100க்கும் மேற்பட்ட கணக்கான ஈரானிய மாலுமிகள் கொல்லப்பட்டனர். இதை 'கடலில் நடந்த ஒரு கொடூரம்' என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி கண்டித்தார்.
கொடூரம்
அவர் தனது 'எக்ஸ்' சமூக வலைத்தளப் பதிவில், "ஈரானின் கரைகளில் இருந்து 2,000 மைல்கள் தொலைவில் கடலில் ஒரு கொடூரமான செயலை அமெரிக்கா செய்துள்ளது. இந்தியக் கடற்படையின் விருந்தினராக இருந்த 'டேனா’ என்ற போர்க்கப்பல், கிட்டத்தட்ட 130 மாலுமிகளுடன், சர்வதேச கடல் பகுதியில் இருந்த கப்பலை எந்தவொரு எச்சரிக்கையும் இல்லாமல் தாக்கியுள்ளது. நான் சொல்வதைக் குறித்துக்கொள்ளுங்கள்: அமெரிக்கா தனது செயலுக்குக் கடும் வருத்தப்படும் அளவுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும்" என்றும் அவர் திட்டவட்டமாக எச்சரித்தார்.
சனிக்கிழமை அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இந்த மோதலைத் தொடங்கின. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி சனிக்கிழமையே கொல்லப்பட்டார். ஆயுதக் கிடங்கு மற்றும் அணுசக்தி திட்டம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஈரானில் இருக்கும் கமேனி ஆட்சியைக் கவிழ்ப்பதும் ஒரு நோக்கம் என்று கூறப்பட்டது. இருப்பினும், அமெரிக்கா நினைப்பது நடக்கவில்லை. இதனால் தாக்குதல்கள் தொடர்கிறது. முடிவில்லாத போரை நோக்கி ஈரான் விவகாரம் செல்லுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
எப்போது முடியும்
பென்டகனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்காவின் தாக்குதல் எவ்வளவு காலம் தொடரும் என்பது குறித்துப் போர் விவகார அமெரிக்க அமைச்சக ஹெக்சித் எந்தவொரு தகவலையும் பகிரவில்லை. அவர் மேலும் கூறுகையில், "நீங்கள் நான்கு வாரங்கள் என்று சொல்லலாம்.. ஆனால் அது ஆறு வாரங்கள் ஆகலாம். எட்டு வாரங்கள் ஆகலாம். அல்லது மூன்று வாரங்களில் கூட முடியலாம். எதிரி சமநிலையற்ற நிலையில் உள்ளனர், அவர்களை அதே நிலையில் வைத்திருப்போம்" என்றும் அவர் கூறினார்.
சிக்கல் என்ன
அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ராணுவம் ஈரான் தளங்களைக் குறிவைத்துத் தாக்குவதால் ஈரானின் தாக்குதல் திறன் குறைந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், போர் தொடர்ந்தால் அது அமெரிக்காவுக்கும் நஷ்டம் தான். ஏனென்றால் ஈரானுக்கு இந்த போரில் இழக்க எதுவும் இல்லை. இதனால் கடைசி வரை இறங்கி அடிக்கும். ஆனால், அமெரிக்காவுக்கு அப்படி இல்லை. ஒவ்வொரு நாளும் இதற்குப் பெரிய தொகையைச் செலவிட வேண்டி உள்ளது. இதனால் போர் ஒரு வாரத்தைத் தாண்டினாலே டிரம்பிற்கு அழுத்தம் அதிகரிக்கும்!
ஈரானை பொறுத்தவரை அங்குக் குறைந்தது 1,045 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் பதினொரு பேர் உயிரிழந்துள்ளனர். ஆறு அமெரிக்கப் படையினர் இதில் கொல்லப்பட்டுள்ளனர்.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications