எங்களை தொட்டா.. இஸ்ரேல்னு சொல்லிக்க எதுவும் இருக்காது! ஈரான் கடும் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஈரான் நடத்தியுள்ள தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இதற்கு பதிலடியை நாங்கள் நிச்சயம் கொடுப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்திருக்கிறார். அப்படி மட்டும் ஏதாவது நடந்தால், அப்புறம் இஸ்ரேல் என சொல்லிக்கொள்ள மிச்சம் மீதி எதுவும் இருக்காது என்று ஈரான் எச்சரித்திருக்கிறது.

பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸுக்கு பயிற்சி கொடுத்தது ஹிஸ்புல்லாதான். ஹிஸ்புல்லாவை உருவாக்கியது ஈரான். ஆக, இஸ்ரேல்-பலஸ்தீன மோதலில் ஈரான் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆனால், கடந்த ஓராண்டாக ஈரான் இதில் பெரிதாக தலையிடவில்லை. இது இஸ்ரேலுக்கு கொஞ்சம் வசதியாக போய்விட்டது. எனவே, தனது தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் விரிவுபடுத்தியது. ஒரு கட்டத்தில் எல்லையை மீறிய அது, ஈரானுக்குள் நுழைந்து ஹமாஸ் தலைவரை கொன்றது.

iran israel

இது ஈரான் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதப்பட்டது. எனவே, அடுத்த நாளே, இஸ்ரேல் மீது சில ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது ஈரான். அதன் பின்னர் சர்வதேச நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு, ஈரானை அமைதிப்படுத்தியது.

இப்படி இருக்கையில்தான் லெபனான் விவகாரத்தில் இஸ்ரேல் மூக்கை நுழைத்தது. ஹமாஸுக்கு உதவும் ஹிஸ்புல்லாவை அழிக்கிறோம் என்று கூறி, லெபனான் மீது அதிகாரப்பூர்வ போரை அறிவித்தார் நெதன்யாகு. இந்த அறிவிப்பு, லெபனானுக்கு மட்டுமல்ல ஈரானுக்கும் அச்சுறுத்தலாகும். ஏனெனில் இப்போது இருக்கும் லெபனானை, கண்ட்ரோலில் வைத்திருப்பது ஹிஸ்புல்லாதான். ஹிஸ்புல்லாவை உருவாக்கியது ஈரான். எனவே லெபனான் போருக்காக ஈரான் களத்தில் குதித்திருக்கிறது.

நேற்றிரவு மட்டும் சுமார் 200க்கும் அதிகமான ஹைபர்சோனிக் ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் இஸ்ரேல் நாட்டின் ராணுவ தளங்கள் பல அழிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த தாக்குதல் வெற்றி அடைந்துள்ளதாகவும் ஈரான் கூறியிருக்கிறது. ஈரானின் நடவடிக்கைக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்க, இஸ்ரேல் மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ துருப்புகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

ஈரான் தாக்குதலையடுத்து பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்ட நெதன்யாகு, "ஈரான் தவறு செய்துவிட்டது. ஹமாஸும், காசாவும் எப்படிப்பட்ட பாடத்தை கற்றுக்கொண்டதோ, அதை ஈரானும் விரைவில் கற்கும். எங்களை பாதுகாத்துக்கொள்ளவும், பதில் தாக்குதல் தொடுக்கவும் உறுதியாக இருக்கிறோம்" என்று எச்சரித்திருந்தார்.

ஆனால், ஈரான் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை. எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், இஸ்ரேல் என சொல்லிக்கொள்வதற்கு எந்த நாடும் இருக்காது என்று ஈரான் மேஜர் ஜெனரல் முகமது பாகேரி கூறியுள்ளார்.

நேற்றுவரை இஸ்ரேல்-பாலஸ்தீனம் என இருந்த போர், தற்போது இஸ்ரேல் vs ஈரான் என மாறியிருக்கிறது. இது மத்திய கிழக்கில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாடுகளும் ராணுவ ரீதியாக வலிமையான நாடுகளாகும். எனவே, இரண்டும் போரில் தீவிரமாக இறங்கினால் மத்திய கிழக்கில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+