Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிரிகள் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க.. அந்தர் பல்டி அடித்த ஈரான் அதிபர்! அண்டை நாடுகளுக்கு வார்னிங்

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: மத்திய கிழக்கில் தொடர்ந்து 9-வது நாளாக பதற்றம் தீவிரமாகும் நிலையில், அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்பதாக ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். தாக்குதல் நடந்தால் கடுமையாக பதிலடி கொடுப்போம் என கூறிய நிலையில், அமீரகம், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளில் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா - இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. 9-வது நாளாக மோதல் நீடித்து வரும் நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஐந்து எரிபொருள் கிடங்குகள் மீது இஸ்ரேல் இன்று வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

Iran Warns of Strong Response After Apology as Explosions Rock UAE Bahrain and Kuwait

மிக மோசமான தாக்குதல்

ஈரான் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. எண்ணெய் கிடங்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு மன்னிப்பு கோரியதாக வெளியான தகவலை மறுத்து பேசியுள்ளார்.

ஈரான் அதிபர் பேச்சு

இது தொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கிஸ்தான் கூறுகையில், "எனது பேச்சை எதிரிகள் தவறாக புரிந்து கொண்டார்கள். எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் திருப்பி அடிப்பதை தவிர வேறு வாய்ப்பே எங்களுக்கு இல்லை. எங்களை தாக்கினால் பதிலடி கொடுக்காமல் இருக்க முடியாது.

எங்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படும் போது, அதற்கான எங்கள் பதிலும் இயல்பாகவே மேலும் கடுமையாக இருக்கும். எங்கள் நாடு, மிரட்டல், அடக்குமுறை அல்லது தாக்குதல் போன்றவற்றுக்கு முன் எளிதில் தலைகுனியாது. இதுவரை தலைகுனிந்ததுமில்லை," என்று அவர் தெரிவித்தார்.

ஈரான் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்

ஈரான் அதிபரின் இந்த கருத்து வெளியாகிய அதே நேரத்தில், மத்திய கிழக்கு பகுதியில் தாக்குதல் அதிகரித்தது. பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வெடிப்பு சத்தங்கள் அத்கம் கேட்டன. துபாயின் பிரபலமான Marina பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் தீப்பற்றிய சம்பவமும் நடந்தது.

வானில் தடுத்து வீழ்த்தப்பட்ட ஏவுகணை அல்லது ட்ரோன் தாக்குதலின் குப்பைகள் விழுந்ததால் ஏற்பட்ட தீ என்று அதிகாரிகள் கூறினர். அண்டை நாடுகளை தாக்கமாட்டோம் என்று அதிபர் உறுதி அளித்ததாக முன்பு கூறப்பட்ட நிலையில், தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்றதால் இது ஈரானின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட திடீர் மாற்றமாக பார்க்கப்பட்டது.

தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக பேச்சு

இதனால் மத்திய கிழக்கு பகுதியில் அமைதி நிலையை ஏற்படுத்தும் முயற்சிக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலிதான் தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக ஈரான் அதிபர் கூறியுள்ளார். முன்னதாக கடந்த இரு நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் உரையாற்றிய ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான், ''எங்களால் தாக்குதலுக்கு உள்ளான அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்பது அவசியம் என நினைக்கிறேன்.

மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்

இதனால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நாங்கள் ஒருபோதும் அண்டை நாடுகளை தாக்கவோ, ஆக்கிரமிக்கவோ விரும்பவில்லை. அமைதியையும், பிராந்திய ஒற்றுமையையும் தான் நாங்கள் விரும்புகிறோம். ஈரானை தாக்க தங்களின் நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதி வழங்காத அண்டை நாடுகள் மீது நாங்கள் இனி தாக்குதல் நடத்தமாட்டோம்.

இந்த முடிவை இடைக்கால தலைமை கவுன்சில் எடுத்துள்ளது. இதனால். இனி ஈரானில் இருந்து அண்டை நாடுகளை நோக்கி ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படாது" என்று கூறியிருந்தார். இதனால், போர் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், ஈரான் நீதித்துறை தலைவர் சில மணி நேரத்தில் இதற்கு மாறான கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+