ஐ.எஸ். தீவிரவாதிகள் விரட்டியடிப்பு- ரமாடி நகரை மீட்டதாக ஈராக் ராணுவம் பிரகடனம்!
பாக்தாத்: ஈராக்கின் ரமாடி நகரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டுவிட்டதாக அந்நாட்டு ராணுவம் பிரகடனம் செய்துள்ளது. கடந்த 18 மாதங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான ஈராக்கின் முதலாவது வெற்றி இதுவாகும்.
ஈராக், சிரியாவின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம், தனி இஸ்லாமிய நாட்டை பிரகடனப்படுத்தியது. இதேபோல் பல்வேறு நாடுகளின் பகுதிகளையும் கைப்பற்றும் வகையில் உக்கிரமான தாக்குதல்களை அண்டை நாடுகளின் மீதும் ஐ.எஸ். இயக்கம் மேற்கொண்டு வருகிறது.

ஆனால் ஐ.எஸ். இயக்கத்தை ஒழிக்கும் வகையில் அமெரிக்கா தலைமையிலான கூட்டு படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன. அத்துடன் ஈராக் படையினர் இழந்த நகரங்களை மீட்கும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளை அளித்தும் வருகின்றன.
இதன் ஒருபகுதியாக ஈராக்கின் மிக முக்கியமான ரமாடி நகரை மீட்பதற்காக கடந்த பல வாரங்களாக பயங்கர யுத்தம் நடைபெற்றது. இந்த யுத்தத்தின் முடிவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ரமாடி நகரில் இருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ரமாடி நகரை முழுமையாக மீட்டுவிட்டதாக ஈராக் ராணுவம் பிரகடனப்படுத்தியுள்ளது. அந்த நகரத்தின் பாதுகாப்பு பணிகளை வழக்கம்போல் போலீசார் மேற்கொள்வர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான 18 மாத யுத்தத்தில் ஈராக் ராணுவத்தின் முதலாவது வெற்றி இதுவாகும்.
ரமாடியைத் தொடர்ந்து ஐ.எஸ். தீவிரவாதிகளின் உயிர்நாடியாக கருதப்படும் மோசூல் நகரை மீட்கும் வகையிலான அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறது ஈராக் ராணுவம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications