இதெல்லாம் சும்மா! இனிதான் பயங்கர தாக்குதலே இருக்கு! இஸ்ரேல் ஈரானுக்கு வார்னிங்? அணுகுண்டு தாக்குதலா?
டெஹ்ரான்: ஈரான் மீது இரண்டாவது நாளாக இஸ்ரேல் சனிக்கிழமையும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கை தீவிரமடையும்.. இன்னும் மோசமான வலுவான விஷயங்கள் மோதல்கள் இனிதான் நடக்க போகின்றன என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
எரிவாயு நிலையங்கள் மீது தாக்குதல்
நேற்று ஈரானின் எரிவாயு நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரான் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையை இஸ்ரேல் குறிவைத்துத் தாக்கியது. ஈரான் அரசு ஊடகங்கள், இஸ்ரேல் தாக்குதலால் எரிவாயு வயலில் தீ விபத்து ஏற்பட்டதாக செய்தி வெளியிட்டன.

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் ஈரான் அணு ஆயுதத் திட்டத்தை பல ஆண்டுகளுக்குப் பின்னுக்குத் தள்ளிவிட்டதாக நெதன்யாகு கூறினார். அயதுல்லாக்களின் ஆட்சிக்குட்பட்ட ஒவ்வொரு தளத்தையும், இலக்கையும் நாங்கள் தாக்குவோம். அவர்கள் இதுவரை உணர்ந்தது அமைதியாக இருக்க வேண்டும். இனி வரும் நாட்களில் அவர்களை நாங்கள் தாக்க போவதோடு ஒப்பிட்டால் இப்போது நடக்கும் தாக்குதல் ஒன்றும் பெரிய விஷயமே இல்லை.. இனிதான் நாங்கள் பெரிதாக தாக்க போகிறோம்.. என்று கூறி இருந்தார்.
எத்தனை பேர் பலி
ஈரானிய அதிகாரிகள், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 29 குழந்தைகள் உட்பட சுமார் 60 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தனர். நாடு முழுவதும் தாக்குதல்கள் நடந்ததாகவும் கூறினர். 150க்கும் மேற்பட்ட இலக்குகளை ஈரானில் தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு ஈரான் நடத்திய பதிலடித் தாக்குதலில் இஸ்ரேலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஏவுகணைகள் வானில் சீறிப்பாய்ந்ததால், இஸ்ரேலியர்கள் பதுங்கு குழிகளுக்குள் தஞ்சமடைந்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலின் தாக்குதல்களைப் பாராட்டியதுடன், ஈரான் இன்னும் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை குறைத்துக்கொள்ள நிறுத்த வேண்டும், இல்லை என்றால் இந்த தாக்குதல் தொடரும் என்று டிரம்ப் கூறினார். ஆனால் ஈரான் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை மொத்தமாக ரத்து செய்துள்ளது.
அணு கசிவு
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் ஈரான் நாட்டின் நடான்ஸ் அணு உலையில் கதிரியக்க கசிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அங்கே அணு கசிவு ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் அவலம் ஏற்பட்டு உள்ளது.
சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி வெளியிட்ட அறிக்கையில், ஈரான் நாட்டின் நடான்ஸ் அணு உலையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் கதிரியக்க மற்றும் இரசாயனக் கலப்படங்கள் ஏற்பட்டதை உறுதிப்படுத்தினார். இருப்பினும், அந்த இடத்திற்கு வெளியே கதிர்வீச்சு அளவு இயல்பாகவே உள்ளது, எனவே பொதுமக்களுக்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நடான்ஸ் அணு உலை மீதான தாக்குதல்
நடான்ஸ் வளாகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து க்ரோஸி கூறுகையில், "நடான்ஸில் உள்ள அணு உலகை அமைப்பில் இஸ்ரேல் தாக்குதலால் கதிரியக்க மற்றும் இரசாயனக் கலப்படம் ஏற்பட்டுள்ளது. அந்த வசதிக்குள் இருக்கும் ஆல்பா துகள்கள் போன்ற கதிர்வீச்சை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் மட்டுமே இனி கட்டுப்படுத்த முடியும். கசிவு ஏற்பட்டுள்ளது பற்றி தீவிர ஆய்வுகள், சோதனைகளை செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
மேலும், யுரேனியம்-235 ஐ 60 சதவீதம் வரை செறிவூட்டும் பைலட் எரிபொருள் செறிவூட்டும் ஆலையின் மேற்பரப்பு பகுதியை இஸ்ரேலிய தாக்குதல்கள் அழித்துவிட்டது. அங்கேயும் ஆய்வு செய்து வருகிறோம்.
சேதங்களை மதிப்பிடுவதற்கும், அணுசக்தி பாதுகாப்பு மற்றும் ஈரான் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஈரான் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்துடன் நமது அமைப்பு தொடர்ந்து தொடர்பில் உள்ளது என்று கூறி உள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications