Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீன அதிபர் பதவியை விட்டுகொடு.. இல்லைனா டம்மியா இரு.. ஜி ஜின்பிங்கிற்கு வந்த சோதனை! 2 சான்ஸ் தான்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவில் 3வது முறையாக ஜி ஜின்பிங் அதிபராக உள்ளார். தற்போது அவருக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சமீபத்தில் 2 வாரம் அவர் மாயமானார். அதன்பிறகு ஜி ஜின்பிங் பொதுவெளியில் அதிகமாக வரவில்லை. அவர் ஓரம்கட்டப்பட்டு வரும் நிலையில் தான் அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதாவது அதிபர் ஜி ஜின்பிங் தனது அதிகாரத்தை தக்க வைப்பராா? இல்லாவிட்டால் ராஜினாமா செய்வாரா? என்ற கேள்வி தொடர்பாக தற்போது பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது உலக அரசியலில் மில்லியன் டாலர் கேள்வியாக இருப்பது ஒன்றே ஒன்று தான். சீன அதிபர் ஜி ஜின்பிங் அதிபராக தொடர்வாரா? இல்லையா? என்பது பற்றிய பேச்சு தான் தற்போது ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சீன அதிபர் ஜி ஜின்பிங் 2 வாரம் வரை மாயமானதும், தற்போது அவர் பொதுவெளியில் அதிகமாக தோன்றாததும் தான்.

xi jinping china

அதேபோல் சீனா அங்கம் வகிக்கும் சர்வதேச அமைப்புகளின் உச்சி மாநாட்டில் தவறாமல் பங்கேற்பார்.

ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது. அமெரிக்காவுக்கு எதிரான மிகப்பெரிய கூட்டமைப்பாக கருதப்படும் பிரிக்ஸ் மாநாட்டின் உச்சி மாநாட்டில் ஜி ஜின்பிங் பங்கேற்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இந்த உச்சி மாநாட்டில் ஜி ஜின்பிங் தவறாமல் பங்கேற்ற நிலையில் முதல் முறையாக தற்போது அவர் மிஸ் செய்தார்.

இதனால் சீனாவில் ஜி ஜின்பிங் ஆட்சிக்கு முடிவுரை எழுதும் காலம் வந்து விட்டது என்று சொல்லப்படுகிறது. அதாவது சீனாவில் ஒற்றை கட்சி ஆட்சி முறை தான் உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி தான் அதிகாரத்தில் எப்போதும் இருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவர் தான் அதிபராக செயல்படுவார். அந்த வகையில் தற்போது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியுடன் ஜி ஜின்பிங் அதிபராக செயல்பட்டு வருகிறார்.

சீனாவில் அதிபர் பதவிக்காலம் என்பது 5 ஆண்டுகளாகும். தற்போது சீன அதிபராக ஜி ஜின்பிங் உள்ளார். இவர் கடந்த 2012ம் ஆண்டு முதல் அந்த பொறுப்பில் செயல்பட்டு வருகிறார். அதன்பிறகு 2018 தேர்தலிலும் ஜி ஜின்பிங் வெற்றி பெற்று 2 முறை அதிபரானார். சீனாவை பொறுத்தவரை 2 முறை மட்டும் தான் ஒருவர் அதிபராக செயல்பட முடியும் அதாவது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக ஒருவர் 10 ஆண்டு மட்டுமே ஒருவரால் பொறுப்பு வகிக்க முடியும்.

ஆனால் அதிபர் பதவியை விட்டு தர விரும்பாத ஜி ஜின்பிங் 10 ஆண்டுகள் தாண்டியும் அவரால் அதிபர் பதவியை தொடர முடிவு செய்தார். இதற்கு தேவையான மாற்றத்தை 2018 ம் ஆண்டில் அவர் மேற்கொண்டார். இதன்மூலம் 2023ல் 3வது முறையாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும், அதிபராகவும் அவர் தொடர்ந்து வருகிறார். ஆனால் உண்மையில் சீனாவில் நடக்கும் அரசியல் குழப்பம் தான் அவர் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காமல் போனதற்கு காரணம் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. பல புலனாய்வு ஊடகங்கள் இது பற்றி துருவியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியே வந்து இருக்கின்றன.

ராணுவத்தில் தனக்கு இருந்த முக்கிய அதிகாரத்தை ஜின்பிங் இழந்து இருப்பது தெரியவந்துள்ளது. வாழ்நாள் அதிபராக இருக்க வேண்டும் என்ற ஆசை தான் இப்போது அவருக்கு எதிரியாக வந்து நிற்கிறது. அதாவது ஜின்பிங் காலத்துக்கு முன்பு அதிபராக இருந்த ஹு ஜின்டாவோவின் ஆதரவாளர்கள் கட்சிக்குள் செல்வாக்கு பெற்று வருகின்றனர்.

சீனாவின் சக்தி வாய்ந்த இன்னொரு பதவி மத்திய ராணுவ கமிஷன் தலைவர் பதவி. இதையும் தன் வசமே வைத்திருக்கிறார் ஜின்பிங். இருப்பினும், சமீபகாலமாக ஜின்பிங்கின் ஆதரவாளர்கள் முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
தற்போது ராணுவ அமைப்புகள் பெரும்பாலும் முந்தைய அதிபர் ஜின்டாவோ ஆதரவாளர்கள் கைக்கு போய் விட்டதாம்.

இதற்கு முக்கிய காரணம் மத்திய ராணுவ கமிஷன் துணை தலைவரான ஜெனரல் ஜாங் யூக்ஸியா. 2013ல் தான் ஆட்சிக்கு வந்ததும் முந்தைய அதிபர் ஜின்டாவோவின் ஆட்களை எல்லாம் நீக்கி விட்டு, தனது ஆதரவாளர்களை நியமித்தார் ஜின்பிங்.

அப்போது ஜாங் யூக்ஸியாவுக்கு தனக்கு அடுத்து முக்கிய பதவியான ராணுவ துணை தலைவர் பதவியை கொடுத்தார். ஆனால் ஜாங் யூக்ஸியாவுக்கு அதிபர் பதவி மீது ஆசை வந்துள்ளது. அதோடு முன்னாள் அதிபர் ஜிண்டோவோவின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக உள்ளனர்.

இது ஜி ஜின்பிங்கிற்கு பிரச்சனையாக மாறி உள்ளது. அதுமட்டுமின்றி அவர் ஓரம் கட்டப்பட்டுள்ளார். வரும் 2028 ம் ஆண்டு வரை ஜி ஜின்பிங்கின் அதிபர் பதவிக்காலம் உள்ளது. ஆனால் தற்போது அந்த நாட்டில் நிலைமை மோசமாகி உள்ளது. இதனால் அவரால் தனது 3வது 5 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்ய முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தான் எதிர்ப்புக்கு பணிந்து ஜி ஜின்பிங் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்யலாம் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் கடந்த 13 ஆண்டு அதிபர் பதவியில் இருந்து அவர் விலக உள்ளார்.

இதுதொடர்பாக சின்ஹுவா செய்தி நிறுவனம் முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. அதில்,‛‛கடந்த ஜூன் 30ம் தேதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 24 உறுப்பினர்களை கொண்ட அரசியல் குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஜி ஜின்பிங் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஒரு புதிய விதிமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவெடுக்கும் அதிகாரிகள், செயல்பாட்டை இன்னும் சிறப்பாக உருவாக்குவது பற்றி விவாதிக்கப்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஜி ஜின்பிங் அதிபராக தொடர்வாரா? அல்லது ராஜினாமா செய்வரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி நிபுணர்கள் கூறுகையில், ‛‛ஜி ஜின்பிங்கிற்கு 2 சான்ஸ் தான் இருக்கிறது. ஒன்று அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதிபர் பதவியில் இருந்து கொண்டு பிற முக்கிய பணிகளை ஆதரவாளர்களிடம் பகிர்ந்து அளிக்க வேண்டும். இந்த 2 சான்ஸ் தான் உள்ளது'' என்கின்றனர். இதன்மூலம் ஜி ஜின்பிங் அதிபர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை அதிபராக அவர் தொடர்ந்தாலும் அதிகாரம் அவரிடம் இல்லாமல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதிகாரம் இல்லாமல் அதிபர் பதவியில் டம்மியாக இருக்க ஜி ஜின்பிங் நீடிக்க விரும்பமாட்டார். இதனால் கடந்த 2012 முதல் அதிபராக உள்ள ஜி ஜின்பிங்கை மாற்றுவதற்கான சாத்தியக்கூறு என்று பேச தொடங்கப்பட்டுள்ளது. இதுபற்றி சீனாவை சேர்ந்த பெயர் கூற விரும்பாத அரசியல் ஆய்வாளர் ஒருவர் சவுத் மார்னிங் செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‛‛சீனாவில்அமைப்பு மற்றும் ஒழுங்குப்படுத்தும் வகையில் விதிகள் கொண்டு வரப்படலாம். ஏனென்றால் இது அதிகார மாற்றத்துக்கான முக்கிய நேரம்'' என்றார். கலிபோர்னியா சான் டியாகோ பல்கலைக்கழகத்தில் சீன அரசியல் மற்றும் நிதித்துறை நிபுணரான விக்டர் ஷிஹ் கூறுகையில், ‛‛ஜி ஜின்பிங் தினசரி பணிகளில் குறைந்த அளவுக்கு கவனம் செலுத்தலாம். அவருக்கு பதில் அவரது கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகள் அந்த பணிகளை மேற்கொள்ளலாம்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+