ஆள் சேர்த்துவிடு, ரூ.6.5 லட்சம் பரிசு பெறு: தீவிரவாதிகளுக்கு ஆசை வார்த்தை காட்டும் ஐஎஸ்
ராக்கா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களுக்கு தெரிந்தவர்களை அமைப்பில் சேர்த்துவிட்டால் அவர்களுக்கு ரூ.6.5 லட்சம் பணப் பரிசு அளிக்கப்படுகிறது.
உலகின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த தீவிரவாத அமைப்பு ஐஎஸ்ஐஎஸ். ஆனால் தற்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதிப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தீவிரவாதிகளின் சம்பளம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
சம்பளம் ஒரேயடியாக குறைக்கப்பட்டுள்ளதால் பல தீவிரவாதிகள் அந்த அமைப்பில் இருந்து விலகி வேறு அமைப்புகளில் சேர்ந்து வருகிறார்கள்.

பரிசு
தீவிரவாதிகள் தங்களுக்கு தெரிந்தவர்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்த்துவிட்டால் அவர்களுக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 6.5 லட்சம் வரை பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர்கள்
அமைப்பில் சேர்பவர்களில் கம்ப்யூட்டர் நிபுணர்கள், டாக்டர்கள் உள்ளிட்ட நன்கு படித்தவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.

தீவிரவாதிகள்
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் தற்போது சுமார் 2 லட்சம் தீவிரவாதிகள் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் தீவிரவாத அமைப்பின் ஒரு பகுதி அழிந்துவிட்டது.

ஐரோப்பா
ஐரோப்பாவில் இருந்து சிரியா, ஈராக் வந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்வோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. தீவிரவாதிகள் சமூக வலைதளங்கள் மூலம் ஐரோப்பியர்களை தங்கள் பக்கம் ஈர்க்கிறார்கள்.

சிரியா
சிரியாவில் உள்ள தீவிரவாதிகளின் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் மூலம் பலரை அமைப்பில் சேர்த்து வருகிறது ஐஎஸ்ஐஎஸ். எத்தனை பேரை ஒருவர் சேர்த்துவிடுகிறாரோ அவருக்கு அவ்வளவு பணம் அளிக்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications