For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரான்சில் பல்பொருள் அங்காடிக்குள் புகுந்து 8 பேரை பிணைக் கைதியாக பிடித்த ஐஎஸ் தீவிரவாதி!

By Shyamsundar
Google Oneindia Tamil News

பிரான்சில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் புகுந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி, அங்கு இருந்த 8 பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருக்கிறான்.

பாரிஸ்: பிரான்சில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் புகுந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி, அங்கு இருந்த 8 பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருக்கிறான்.

ISIS terrorist attacks in France supermarket takes 8 hostages

இன்று காலை பாரிஸின் 'டிரேப்ஸ்' என்ற நகரத்திற்கு அருகே இருக்கும் 'சூப்பர் யூ' என்ற பல்பொருள் அங்காடியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அந்த அங்காடிக்கு வெளியே இருந்த பாதுகாப்பு போலீஸ் நான்கு பேர் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவனால் சுடப்பட்டு இருக்கிறார்கள்.

அந்த பகுதியில் காரில் வந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவன் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தி இருக்கிறான். இந்த காரும் திருடப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த காரை திருடியபோதும், அந்த தீவிரவாதி போலீஸ்காரர் ஒருவரை சுட்டுவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

காலை 11 மணிக்கு பல்பொருள் அங்காடிக்குள் புகுந்த அந்த தீவிரவாதி இன்னும் பிணைக்கைதிகளை பிடித்து வைத்துள்ளான். 8 பொதுமக்கள் உள்ளே இருப்பதாக கூறப்படுகிறது.

30க்கும் அதிகமான ராணுவ அதிகாரிகள் வெளியே குழுமி இருக்கிறார்கள். 3 ஹெலிகாப்டர்கள் அந்த பகுதியை சுற்றி வந்து கொண்டு இருக்கிறது.

அந்த தீவிரவாதியின் கோரிக்கை என்ன என்று கேட்கப்பட்டு வருகிறது. இதுவரை இதில் யாரும் மரணமடையவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

English summary
ISIS terrorist attacks in France supermarket takes 8 hostages. Military rounded up the place and investigating goes on with the terrorist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X