விளைவுகளை நினைத்து பார்க்கவே முடியாது.. ஈரானின் அணுசக்தி நிலையங்களை தாக்கப்போகிறதா இஸ்ரேல்?
டெல் அவிவ்: ஈரான், இஸ்ரேலை நோக்கி சுமார் 200 ஏவுகணைகள் மூலம் பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல், ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களை தாக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
அதிகரித்து வரும் பதற்றங்களின் மத்தியில், ஈரானின் அணுசக்தி மையங்கள், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகளின் அணு ஆயுதக் கண்காணிப்பாளர் போன்ற சர்வதேச அமைப்புகளின் கவலைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. ஈரான் என்னதான், இல்லவே இல்லை என்றாலும், 2003 வரை ஒரு ரகசிய அணு ஆயுதத் திட்டம் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

2018 இல் அமெரிக்கா வெளியேறியதைத் தொடர்ந்து, ஈரான் யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது. சர்வதேச அணுசக்தி முகமை (IAEA), இரான் இப்போது கிட்டத்தட்ட நான்கு அணு ஆயுதங்களை உருவாக்க போதுமான செறிவூட்டப்பட்ட யுரேனியம் வைத்திருப்பதாகக் கூறியுள்ளது.
இரானின் அணுசக்தி நிலப்பரப்பில் பல முக்கியமான தளங்கள் உள்ளன: நத்தன்ஸ், ஃபோர்டோ, ஈஸ்பஹான், கொன்டப் (அரக்), தெஹ்ரான் சோதனை மையம் மற்றும் புஷேர் போன்றவை முக்கிய தளங்களாகும். இவற்றின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் என்ன ஆகும் என்ற அச்சம் உலகளாவிய அளவில் எழுந்துள்ளது.
ஈரானின் தாக்குதலுக்குப் பிறகு, "ஈரான் இன்று பெரிய தவறு செய்துவிட்டது, அதற்கான விலையை அது செலுத்தும்" என்று நெதன்யாகு அறிவித்தது, இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்துவதில் உறுதியாக இருப்பதை இது காட்டுகிறது.
அணு ஆயுத மையங்கள் மீது மட்டுமல்லாமல் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அணு ஆயுத மையங்கள் அல்லது எண்ணெய் கிணறுகள் என்ற ஆப்ஷனும் இஸ்ரேலிடம் உள்ளது. எண்ணெய் கிணறுகள் மீது தாக்கினால் அதன் மூலமாக ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைத்து விட முடியும் என்று இஸ்ரேல் நம்புவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
குட்டையை குழப்பிய இஸ்ரேல்.. செங்கடலில் உச்சக்கட்ட பதற்றம்! போர் இப்போதைக்கு முடியாது போல! -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
ஹார்முஸ் நோக்கி வந்த ஈரானிய டிரோன்கள்...சுட்டு வீழ்த்திய அமெரிக்கா..மீண்டும் உச்சத்தில் டென்ஷன் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications